சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!

 
Leave

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2 வாரங்களாக வடகிழக்குப் பருவ மழை தீவிரமாகப் பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதியின் காரணமாக தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் கனமழை பெய்து வருகிறது. இந்த அதீத கனமழையால் மயிலாடுதுறை, கடலூர், பூம்புகார், சீர்காழி ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

MKS

குறிப்பாக சீர்காழியில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6 மணி நேரத்தில் 44 செ.மீ மழை கொட்டித் தீர்த்தது. சிதம்பரம், சீர்காழி, தரங்கம்பாடி உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர் கனமழை பெய்ததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டார். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள குடும்பங்களுக்கு இழப்பீடு அறிவித்துள்ளார்.

Leave

இந்நிலையில் கனமழை பாதிப்பு காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவம்பர் 17) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் லலிதா வெளியிட்டுள்ள உத்தரவில், பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேங்கி இருப்பதால், பள்ளிகள் நிவாரண முகாம்களாகச் செயல்படுவதன் காரணமாக சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web