காலியாக உள்ள அரசு பள்ளிகளில் 13,300 ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமணம்

 
Teacher

மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், தமிழக பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து வகை ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 7,500 ரூபாய் தொகுப்பூதியமும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு 10,000 ரூபாயும், முதுகலை ஆசிரியர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் என்ற அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

teacher

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், மூத்த பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்டோர் அடங்கிய குழு ஆசிரியர் தேர்வை நடத்த வேண்டுமென அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 1-ம் தேதி முதல் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய மாவட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. இது ஆசிரியர் பணியை எதிர்நோக்கி காத்திருக்கும் தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

From around the web