மணப்பாறையில் அதிர்ச்சி சம்பவம்!! 4 கி.மீ தூரம் வீல் சேரில் வைத்து மயானத்துக்கு தள்ளிச் சென்ற மகன்!

 
Manaparai

திருச்சி அருகே தோல் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தாய் உடலை வீல் சேரில் வைத்து மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்த சம்பவம் நெஞ்சை பதற வைத்ததுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை பாரதியார் நகரைச் சேர்ந்தவர் பெரியசாமி (85). இவரது மனைவி ராஜேஸ்வரி (74). இவர்களது மகன் முருகானந்தம் (50). எலக்ட்ரீசியனான இவருக்கு, திருமணமாக வில்லை. இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ராஜேஸ்வரிக்கு தோல் நோய் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவரது மகன் முருகானந்தம் தனது தாயை பராமரித்து வந்தார்.

Rajeswari

இந்த நிலையில் தாய் ராஜேஸ்வரி உடல் நலக்குறைவால் நேற்று அதிகாலை 4 மணிக்கு உயிரிழந்தார். தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது தாயாருக்கு அஞ்சலி செலுத்தவும், இறுதி காரியங்களை செய்யவும் ஊர்காரர்கள் யாரும் வரமாட்டார்கள் என்று தானாகவே முடிவு செய்து கொண்ட முருகானந்தம் ஊரில் யாருக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கவில்லை. இறந்தவர்களுக்கு செய்யப்படும் எந்த சடங்கையும் அவர் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

அதனால் உயிரிழந்த தனது தாய் உடலை வீல் சேரில் வைத்து துணிகளால் போர்த்தி கட்டினார். பின்னர் அதிகாலை 5.30 மணியளவில் 4 கி.மீ தொலைவில் உள்ள செவலூர் பகுதியில் இருக்கும் மயானத்திற்கு எடுத்து சென்றார்.

Manaparai

மயானத்திற்கு சென்றவர் அங்கிருந்த ஊழியரிடம் தனது தாயை ஏரியூட்ட வேண்டும் என்று கேட்டபோது மேளம் இல்லை, உற்றார் உறவினர்கள் இல்லை, பாடையோ, வண்டியோ இல்லை, பிறகு எப்படி தாயை தூக்கி வந்தீர்கள் என்று அவர் கேட்டிருக்கிறார். அப்போதுதான் தோல் நோயால் பாதிக்கப்பட்ட தனது தாய்க்கு இறுதி சடங்கு செய்ய யாரும் வரமாட்டார்கள் என்று முருகானந்தம் கூறியிருக்கிறார். அதனையடுத்து முருகானந்தத்தின் உதவியுடன் மயானத்தில் இருந்த ஊழியர், ராஜேஸ்வரி உடலை எரியூட்டி இருக்கிறார். இது குறித்து தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெற்ற தாயை உற்றார் உறவினர் இன்றி, உரிய இறுதிச் சடங்குகள் செய்யாமல் அவரது மகன் இடுகாட்டுக்கு கொண்டு சென்று எரியூட்டிருப்பது மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

From around the web