அமேசான் நிறுவன லாரியில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை.. மாயமான லாரி டிரைவருக்கு வலைவீச்சு..!   

 
Amazon-products-missing-in-container

அமேசான் நிறுவனத்துக்கு சொந்தமான லாரியில் இருந்து சுமார் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள நிலையில், மாயமான லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த 10-ம் தேதி டெல்லியில் இருந்து சேலத்தில் உள்ள அமேசான் குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கண்டெய்னர் லாரியை, அரியானாவை சேர்ந்த ஜூடு என்ற நபர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில், காட்டூர் பகுதியில் சாலையோரமாக நெடு நேரமாக ஒரு லாரி நின்றிருந்ததைக் கண்ட பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

விசாரணையில் அது அமேசான் குடோனுக்கு பொருட்களை ஏற்றி வந்த லாரி என்பது தெரியவந்தது. அமேசான் நிறுவனத்தினர் வந்து பார்த்த போது, லாரியின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு சுமார் 10 லட்சம் மதிப்பிலான லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

டிரைவரின் செல்போன் எண் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதால், டிரைவர் பொருட்களை திருடிச் சென்றரா? அல்லது வேறு யாரேனும் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

From around the web