நிச்சயமான பெண்ணிடம் போனை மாற்றி வசமாக சிக்கிய ‘லவ்டுடே’ ரியல் ஹீரோ!! வாழப்பாடி அருகே பரபரப்பு

 
Vazhapadi

வாழப்பாடி பகுதியில் ‘லவ்டுடே’ பாணியில் செல்போனை மாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் போக்சோவில் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூர் மாதா கோவில் பகுதியில் வசித்து வருபவர் அரவிந்த் (23). தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநரான இவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமானது. இந்த நிலையில் அவரது செல்போனை லவ்டுடே பாணியில், அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் வாங்கி பார்த்து உள்ளார். அவர் அரவிந்தின் செல்போனை அலசி ஆராய்ந்த போது அதிர்ச்சியில் உறைந்து போனார்.

அரவிந்த்தின் வீடியோக்களை பார்த்த போது, 10-ம் வகுப்பு மாணவியின் அரை நிர்வாண வீடியோவை மற்றொரு முனையில் அரவிந்த் பார்ப்பது போன்று ஒரு வீடியோ இருந்தது. இது குறித்து நிச்சயிக்கப்பட்ட பெண் விசாரிக்க தொடங்கினார். அப்போது தான், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் புதிதாக கணக்கு தொடங்கிய 10-ம் வகுப்பு மாணவி ஒருவரை அரவிந்த் குறி வைத்து பழகியதும், அவரின் செல்போன் எண்ணை பெற்று தொடர்ந்து காதல் மொழி பேசியதும் தெரியவந்தது.

Engagement

மேலும் அரவிந்த்தின் பேச்சில் அந்த மாணவி மயங்கி உள்ளார். ஒரு கட்டத்தில் வீடியோ காலில் அரவிந்த் அந்த மாணவியுடன் பேசி உள்ளார். அப்போது அந்த மாணவியை அரை நிர்வாணமாக பாா்க்க ஆசைப்படுவதாக கூறி அரவிந்த் வற்புறுத்தி உள்ளார். அதை வீடியோ பதிவு செய்ய மாட்டார் என்று நம்பி அந்த மாணவியும் அரை நிர்வாணமாக இருக்க அதை அந்த மாணவிக்கு தெரியாமல் அரவிந்த் வீடியோவாக பதிவு செய்த காட்சியை தான் அவருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் பார்த்து உள்ளார்.

உடனே அவர் அந்த மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், வாழப்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் அரவிந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.

Vazhapadi Lady PS

கைதான அரவிந்திடம், இதுபோன்று வேறு பெண்களின் நிர்வாண வீடியோவை பதிவு செய்து உள்ளாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து வெளியான தகவல் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. லவ்டுடே பாணியில் செல்போனை மாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர் போக்சோவில் கைதான சம்பவம் வாழப்பாடி பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

From around the web