நெக்ஸ்ட் ரவுண்டுக்கு ரெடியா.. இன்று உருவாகுகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி

 
Rain

தமிழ்நாட்டில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை இன்று (நவம்பர் 16) உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த புதன்கிழமை வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்து கடந்த வியாழக்கிழமை அன்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் அது நிலை கொண்டது.

cyclone

இதனால் தென் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும், வடதமிழ்நாட்டில் சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 20க்கும் அதிகமான மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததால் மழையின் தீவிரம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தெற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (நவம்பர் 16) உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain

இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாடு மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் தென்கிழக்கு, தென்மேற்கு, மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

From around the web