மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டி ஒருவர் பலி.. பார்க்க வந்தவருக்கு நேர்ந்த சோகம்!!

 
Jallikattu

புதுக்கோட்டை ராயவரம் மஞ்சுவிரட்டில் காளை குத்தியதில் பார்வையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டுதோறும் அதிக அளவில் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகள் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்படுவது வழக்கம்.

manjuvirattu

அந்த வகையில் இன்று புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கே.ராயபுரம் கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் களத்தில் அவிழ்த்து விடப்பட்டன. ஆயிரக் கணக்கான பார்வையாளர்கள் மஞ்சுவிரட்டை கண்டு ரசித்து வந்தனர்.

இதற்கிடையே சிவகங்கை மாவட்டம் புதுவயல் கிராமத்தை சேர்ந்த கணேசன் (வயது 50) என்பவரும் மஞ்சு விரட்டு பார்க்க வந்துள்ளார். மஞ்சுவிரட்டு பார்த்துக்கொண்டிருந்தபோது கணேசனை காளை முட்டியதில் காயமடைந்தார். உடனடியாக மீட்பு குழுவினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

dead-body

நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜ் காளை குத்தியதில் உயிரிழந்தார். அதேபோல் திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த அரவிந்த் என்ற இளைஞரும் காளை முட்டித் தள்ளியதில் பலியானார். இந்த நிலையில் மஞ்சுவிரட்டு பார்க்க வந்த கணேசனும் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மஞ்சுவிரட்டு போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

From around the web