10 நாட்களில்... 21 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!

 
IPS

21 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1-ம் தேதி புத்தாண்டு தினத்தன்று தமிழ்நாடு அரசு 45 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் மற்றும் பணி உயர்வு வழங்கி உத்தரவிட்டது. இந்த நிலையில் அடுத்த 10 நாட்களில் மீண்டும் 21 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் 7 பேருக்கு பதவி உயர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் உள்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஐபிஎஸ் அதிகாரியும் கூடுதல் டிஜிபியுமான சைலேஷ் குமார் யாதவ் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்படுகிறார். சென்னை காவல் துறை தலைமையகத்தில் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரி மனோகர், சென்னைப் பெருநகர காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்படுகிறார்.

Police-transfer

மதுரை துணை ஆணையர் வனிதா, சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றத் தடுப்புப் பிரிவு துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்படுகிறார். சேலம் துணை ஆணையர் ராதாகிருஷ்ணன், சென்னை டிஜிபி தலைமை அலுவலகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்.

காத்திருப்புப் பட்டியலில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரி சாம்சன், தென்காசி மாவட்ட எஸ்.பி.யாக இடமாற்றம் செய்யப்படுகிறார். தென்காசி எஸ்.பியான ஐபிஎஸ் அதிகாரி செந்தில்குமார் சென்னை அமலாக்கத் துறை எஸ்.பியாக பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்.


காத்திருப்புப் பட்டயலில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரி ஆஷிஷ் ராவத், தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்படுகிறார். தஞ்சை மாவட்ட எஸ்.பியாக இருந்து வரும் ஐபிஎஸ் அதிகாரி முத்தரசி, சென்னை சிபிசிஐடி எஸ்.பியாக பணியிடமாற்றம் செய்யப்படுகிறார்.

காவலர் பயிற்சி பள்ளி எஸ்.பி செல்வராஜ் சிவகங்கை மாவட்ட எஸ்.பியாக பணியிடமாற்றம் செய்யப்படுகிறார். இவர்களைத் தவிர 7 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வுடன் பணியிட மாற்றம் என்பது உட்பட தமிழகம் முழுவதும் 21 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

From around the web