உயிர் மேல் அக்கறை இருந்தால்.. முகக்கவசம் அணியுங்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 
People-Must-Wear-Face-Mask-to-Save-the-Life

உயிர் மேல் அக்கறையும், ஆசையும் இருந்தால் முகக்கவசம் அணியுங்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம். அபராதம் இல்லை. அபராதம் விதிக்கப்படுவதில் இருந்து தான் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்றபடி முகக்கவசம் அணிவது என்பது ஒவ்வொருவரும் தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்வதற்கு செய்யவேண்டிய காரியமாகும். அபராதம் விதித்து தான் தீரவேண்டும் என்ற மனநிலைக்கு மக்கள் வரக்கூடாது.

கட்டாயம் என்று கூறி மக்களை வற்புறுத்தி காவல் நிலையத்தில் கைது செய்வோம், அபராதம் விதிப்போம் என கூறிய பிறகுதான் நான் என்னுடைய உயிரை காப்பற்றிக்கொள்ள முயற்சிப்பேன் என்று சொல்வது தவறு. முகக்கவசம் என்பது பொதுமக்களுக்கான விஷயம். அவரவர் தங்கள் உயிர் மேல் அக்கறை இருந்தால், ஆசை இருந்தால் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும் என்பது தான் உலக நியதி.

முகக்கவசம் இப்போது எல்லோரும் அணிந்துகொள்வது அவசியம். வட மாநிலங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முகக்கவசம் அணிவது விலக்கிக்கொள்ளப்படவில்லை. முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும். ” என்று பேசினார்.

From around the web