ஐடி பெண் ஊழியர் நூதன முறையில் தற்கொலை!! திருமணமான நான்கே மாதத்தில் விபரீத முடிவு 

 
Indu
கோபிசெட்டிபாளையம் அருகே திருமணமான நான்கே மாதத்தில் பட்டதாரி பெண், நூதன முறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த பொலவக்காளிபாளையம் தோட்டக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் திருவேங்கடசாமி. இவரது மனைவி மரகதமணி. இந்த தம்பதியரின் மகள் இந்து. பிஇ பட்டதாரியான இவர், கோவையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், இவருக்கும் நல்லகண்டன்பாளையம் துளசி நகரைச் சேர்ந்த விஷ்ணுபாரதி என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது.
  A-schoolgirl-who-attempted-suicide
இந்நிலையில், திருமணத்திற்குப் பிறகு கணவன் மனைவி இருவருமே சென்னையில் தங்கி பணிபுரிந்து வந்தனர். இதையடுத்து கடந்த 10 நாட்களுக்கு முன்னர் பொலவகாளிபாளையம் அருகே உள்ள தோட்டக்காட்டூரில் உள்ள இந்துவின் பாட்டி உடல்நிலை சரியில்லாத நிலையில் பார்ப்பதற்காக வந்துள்ளார்.
இதையடுத்து நேற்று மதியம் வீட்டிலிருந்த தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்ட இந்து இரவு வரை வெளியே வரவில்லை. இதனால் அருகில் இருந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது முகத்தில் பிளாஸ்டிக் கவரை சுற்றி கழுத்து வரை முழுமையாக டேப் வைத்து ஒட்டப்பட்டு இருந்தது.
Gobichettipalayam
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோபிசெட்டிபாளையம் போலீசார், இந்துவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முகத்தில் பிளாஸ்டிக் கவரை சுற்றி கழுத்து வரை முழுமையாக டேப் வைத்து ஒட்டிவிட்டு ஹீலியம் வாயுவை அந்த கவருக்குள் செலுத்தி தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இவர் ஹீலியம் வாயு சிலிண்டரை ஆன்லைனில் வாங்கி இருப்பது தெரிய வந்தது.
திருமணமாகி நான்கு மாதங்களே ஆவதால் இந்துவின் தற்கொலைக்கான காரணம் குறித்து கோபி கோட்டாட்சியர் மற்றும் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web