ஆளுநர் மாளிகைக்கு எதிரே டிஜிட்டல் டிஸ்ப்ளே போர்டு! சமூகத் தளத்தில் கோரிக்கை!! எதற்கு தெரியுமா?

 
Governor-assured-the-chiefMinister-that-the-NEET-Exemption

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் கையொப்பமிடாமலும், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமலும் காலம் தாழ்த்தி வருகிறார் என்று அரசுத் தரப்பில் முதலமைச்சர் குற்றம் சாட்டி வருகிறார். நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் ஆளுநர் வெறும் போஸ்ட் மேன் தான், அதைக் கூட செய்யாமல் ஏன் காலம் தாழ்த்துகிறார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையான கேள்வியை எழுப்பினார்.

இந்நிலையில் ஆளுநரிடம் தேங்கியுள்ள மசோதக்கள் பற்றிய விவரங்களை அன்றாடம் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனிடம் ட்விட்டரில் இந்த கோரிக்கை வைக்கப்பட்ட போது, பரிசீலிக்க வேண்டிய ஒன்று என்று கூறியிருந்தார்.

தற்போது திராவிடப் புரட்சி என்ற பெயரில் பதிவு ஒன்று சமூகத் தளத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதில், 

"மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே!

ஆளுநர் வசிக்கும் ராஜ்பவன் நுழைவாயிலுக்கு வெளியே எதிரே பொதுமக்களும் பார்க்கும் வகையில் மிகப்பெரிய எலக்ட்ரானிக் டிஸ்பிளே போர்ட் வைக்க வேண்டும்.

அதில் ஆளுநருக்கு இதுவரை திமுக அரசு அனுப்பியுள்ள மசோதாக்களின் பட்டியல், அனுப்பப்பட் தேதி, தேங்கி இருக்கும் நாட்களின் எண்ணிக்கை போன்றவற்றை குறிப்பிட வேண்டும். அந்த போர்டில் இருக்கும் தகவல்கள் அன்றாடம் அப்டேட் செய்யப்பட வேண்டும்.

பட்டியல் பெரிதானால் போர்டும் பெரிதாக வேண்டும். மாநிலத்தில் நடப்பவனவற்றை தமிழ்நாட்டு மக்களும், உலக மக்களும் அறிந்துக் கொள்ள ஏற்பாடு செய்யுங்கள்.

அதன் பிறகும் காலவரையறையின்றி மசோதாக்களை தேக்குவதை ஆளுநர் நிறுத்துகிறாரா தொடர்கிறாரா என்பதை தமிழர்களும் உலக மக்களும் தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.

- திராவிடப் புரட்சி" என்று கூறப்பட்டுள்ளது.

From around the web