குற்றாலத்துக்கு சுற்றுலா சென்ற மினி பேருந்து மீது லாரி மோதி கோர விபத்து!! 2 பேர் பலி, 5 பேர் படுகாயம்!

 
cuddalore

சுற்றுலா பயணிகள் சென்ற வாகனம் லாரி மீது மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் குற்றாலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியில் இருந்து குற்றாலத்திற்கு மினி பேருந்தில் 18 பேர் கொண்ட சுற்றுலா குழுவினர் புறப்பட்டு சென்றனர். வாகனம் மதுரை அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் நின்று கொண்டிருந்த தண்ணீர் லாரி மீது திடீரென்று பலமாக மோதியது. அந்த வேகத்தில் வாகனம் அப்பளம் போல நொருங்கியது.

accident

இதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியானார்கள். மேலும் 5-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அனைவரும் இணைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த 5 பேர் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்கு காரணமாக இருந்த லாரியை நடுரோட்டில் நிறுத்தி வைத்த லாரி ஓட்டுனரை தீவிரமாக தேடி வருகின்றனர்.  மேலும் விபத்து குறித்து மதுரை ஒத்தக்கடை போக்குவரத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

dead-body

மீட்புப் பணியால் மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். குற்றாலத்திற்கு சுற்றுலா சென்ற 18 பேர் சென்ற வாகனம் பெரும் விபத்தை சந்தித்து உயிர் பலி ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

From around the web