30 மாமர இலைகளில் 1,330 திருக்குறள்கள்! சாதனைப் படைத்த அரசு பள்ளி ஆசிரியை!!

 
teacher-wrote-thirukural-in-mango-leaves

முசிறி அருகே அரசு துவக்கப் பள்ளி ஆசிரியை 30 மாமரத்தின் இலைகளில் 1,330 குறள் எழுதி சாதனை படைத்துள்ளார்.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே கோடியாம்பாளையம் அரசு துவக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிபவர் அமுதா. இவர் பாண்டிச்சேரியில் நடைபெற்ற உலக சாதனையாளர்கள் போட்டியில் பங்கேற்றார்.

அப்போது 30 மாமரத்தின் இலைகளில் 1,330 திருக்குறளை 20 மணி நேரத்தில் எழுதி சாதனை படைத்துள்ளார். இவருக்கு பாண்டிச்சேரி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் பொறுப்பாளர் வெங்கடேசன் சான்றிதழ் வழங்கினார்.

திருக்குறள் உலக சாதனையாளர் சங்கத்தின் நிறுவனங்களும் பாராட்டுச் சான்றிதழ் ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ளனர். திருக்குறளை மாமரத்தின் தளிர் இலைகளில் எழுதி சாதனை படைத்த ஆசிரியைக்கு தொட்டியம் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்கள், கல்வியாளர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

From around the web