செய்யூர் அருகே 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை! பள்ளி நிர்வாகத்தின் மீது புகார்

 
Santhoshkumar

செய்யூர் அருகே பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே செங்காட்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் சுசில்குமார் (39). இவரது மகன் சந்தோஷ்குமார் (15). இவர் செய்யூர் சால்ட் காலனி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

Suicide

நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பிய சந்தோஷ்குமார் வீட்டின் படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உறவினர்கள் போலீசாருக்கு தகவல் அளிக்காமல் உடலை அடக்கம் செய்ய முடிவு செய்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செய்யூர் போலீசார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Cheyyur-PS

சந்தோஷ்குமாரின் சாவில் சந்தேகம் இருப்பதாக பள்ளி நிர்வாகத்தின் மீது உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து செய்யூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web