பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்திய நபரால் குளத்தில் பாய்ந்த கார்.. டிரைவிங் கற்றுக்கொண்டபோது சோகம் 

 
Telangana

தெலுங்கானாவில் டிரைவிங் கற்றுக்கொண்டபோது கார் குளத்தில் பாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஜங்கானில் குளத்தை ஒட்டிய வயல்வெளிக்கு அருகில் கார் ஓட்டுவதற்காக ஒருவர் பயிற்சியெடுத்து வந்துள்ளார். அப்போது அவருக்கு கார் ஓட்ட சொல்லிக்கொடுத்த நபர் பிரேக் போட சொல்லியுள்ளார். அப்போது பிரேக்கிற்கு பதிலா ஆக்சிலேட்டரை அந்த நபர் அழுத்தியுள்ளார்.

Telangana

இதனால் கார் பக்கத்தில் இருந்த ஒரு குளத்திற்குள் விழுந்துள்ளது. குளத்திற்குள் கார் மூழ்க தொடங்கியதை அடுத்து இருவரும் காரை விட்டு குளத்திற்குள் குதித்துள்ளனர். அப்போது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை காப்பற்றியுள்ளனர். 

இருவருக்குமே நீச்சல் தெரியும் என்பதாலும், குளம் ஆழமாக இல்லாததாலும் இருவரும் உயிர் பிழைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டியதாக போலீசார் அவர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


இதனை தொடர்ந்து கிரேன் உதவியுடன் கார் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web