மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்… 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ்… அரசு அறிவிப்பு.!!

 
school

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் கோடை வெப்பம் அதிகரிப்பு காரணமாக புதுவை மாநில அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு முன்னரே இறுதி தேர்வு அறிவிக்கப்பட்டது. தேர்வுகள் நேற்று முன்தினம் முடிந்தது. நேற்றோடு 10-ம் வகுப்பு தேர்வுகள் முடிந்தது. இதனால் புதுவை மற்றும் காரைக்கால் மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது. 

Leave

இது தொடர்பாக கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 8-ம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் நூறுக்கும், முழு ஆண்டு தேர்வு மதிப்பெண்கள் நூறுக்கும் என குறிப்பிட்டு தேர்ச்சி அட்டவணையில் குறிப்பிட வேண்டும். 

9-ம் வகுப்பு மாணவர்கள் ஆண்டு இறுதித்தேர்வில் 35 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால்தான் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். இதன் அடிப்படையில் தேர்ச்சி பட்டியலை தயாரிக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. 

puducherry

அதேபோல் பள்ளிகளில் தேர்ச்சி பெற்றோர் விவரங்கள் அடங்கிய பட்டியலை கல்வி துறைக்கு சமர்பிக்க வேண்டும். அப்போது இயக்குநரகத்தால் தரப்பட்ட பள்ளி அங்கீகாரம் மற்றும் புதுப்பித்தல் அங்கீகார உத்தரவின் நகலை தனியார் பள்ளிகள் இணைக்க வேண்டும். எல்.கே.ஜி. முதல் 9-ம் வகுப்பு வரையிலான கோடைவிடுமுறை நேற்று முதல் தொடங்கியது. இதை அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

From around the web