டெல்லியில் மனைவியை விற்ற கணவன்.. மனைவியை வேறொருவருக்கு விற்றவர் கைது!!

 
Odisha

ஒடிசாவில் வாலிபர் ஒருவர் மனைவியை வேறொருவருக்கு விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஒடிசா மாநிலம் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள நார்லா காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்தவர் கீரா பெருக் (25). சமீபத்தில் இவருக்கும் பூர்ணிமா போய் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து தனது மனைவி பூர்ணிமா போயுடன் தனது வீட்டை விட்டு அக்டோபர் 30-ம் தேதி டெல்லிக்கு வேலை தேடிச் சென்றார்.

Odisha

இருப்பினும், 2 நாட்களுக்குப் பிறகு, கீரா பெருக் பூர்ணிமாவை மற்றொரு நபருக்கு பணத்திற்காக விற்றார். அவரிடம் இருந்து பெரும் தொகையை வாங்கிக் கொண்டு அவரது மனைவியைக் அந்த நபருக்கு திருமணம் செய்து வைத்தார்.

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பெண் தனது தந்தை குலமணி போய்க்கு போன் செய்து டெல்லியில் திருமணம் செய்து கொண்ட வீடியோ கிளிப்பை அனுப்பினார்.

arrest

இதையடுத்து பூர்ணிமாவின் தந்தை நர்லா காவல் நிலையத்தில் கீரா பெருக் மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் நார்லா போலீசார் கீராவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web