ரூ. 500-க்கு சிலிண்டர்... காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு! சூடு பிடிக்கும் தேர்தல்

 
Gujarat

குஜராத் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால், சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ. 500-க்கு வழங்கப்படும் என்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

குஜராத் சட்டமன்ற பதவிக்காலம் வரும் 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவடையவுள்ளது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் குஜராத்துக்கு எப்போது தேர்தல் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

Congress

182 தொகுதிகள் கொண்ட குஜராத் சட்டமன்றத்துக்கு வரும் 1-ம் தேதி முதல் கட்டமும், 5-ம் தேதி 2-ம் கட்டமும் நடைபெற்று, 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

இந்த நிலையில், குஜராத் மாநிலத்துக்கான தேர்தல் அறிக்கையை, ராஜஸ்தான் மாநில முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் கெலாட் வெளியிட்டார்.

அதில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்றும், மாநிலத்தில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 300 யூனிட் மின்சாரம், 500 ரூபாய்க்கு சிலிண்டர் என்ற வாக்குறுதிகளையும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

Cylinder

வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் தர உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மூன்று லட்சம் ரூபாய் வரையிலான விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.

From around the web