இணையத்தில் லீக்கான ஹாஸ்டல் மாணவிகளின் அந்தரங்க வீடியோ!! சண்டிகர் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு!

 
Chandigarh

பஞ்சாபில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி ஒருவர் சக மாணவிகளின் தனிப்பட்ட வீடியோக்களை வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் மொகாலியில், சண்டிகர் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் சேர்ந்து மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், விடுதியில் தங்கி படிக்கும் மாணவி ஒருவர், சக மாணவிகளின் அந்தரங்க வீடியோ மொபைல் போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

chandigarh

இந்த சம்பவத்தில் அங்கு பயிலும் மாணவர்கள் யாரேனும் ஈடுபட்டு இருக்கலாம் என்று முதலில் சந்தேகம் எழுந்தது. ஆனால், எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரே இந்த வீடியோவை எடுத்து வெளியிட்டதாக கூறப்படுகிறது. குளியலறையில் ரகசிய கேமரா வைத்து இந்த வீடியோக்களை எடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த வீடியோக்கள் அனைத்தையும் இணையதளத்திலும் கசிய விட்டு இருக்கிறார். இதைத்தொடர்ந்தே மாணவர்கள் மத்தியில் இந்த வீடியோக்கள் பரவியாதாக கூறப்படுகிறது. இந்த தகவலால் பெற்றோர்களும் மாணவிகளும் அதிர்ச்சி அடைந்த நிலையில், பல்கலைக்கழகத்தில் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Chandigarh

குளியலறையில் ரகசிய கேமரா வைத்து இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட மாணவி தனது செயலை ஒப்புக்கொண்டதாகவும் தற்போது போலீசார் அந்த மாணவியிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. வீடியோக்கள் கடும் மன உளைச்சல் அடைந்த மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே மாணவிகள் சிலர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது. ஆனால், இந்த தகவல்களை பல்கலைக்கழக நிர்வாகமும் போலீசாரும் மறுத்துள்ளனர். மாணவிகளின் வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்த முக்கிய குற்றவாளியான ஆண் நண்பரை கைது செய்ய பஞ்சாப் போலீசார் சிம்லா விரைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web