ஓடும் ரயிலில் திருடனுக்கு பயணிகள் கொடுத்த கொடூர தண்டனை! வைரல் வீடியோ

 
Bihar

பீகாரில் ஒரு ரயில் நிலையத்தில் ஜன்னல் வழியாக பயணியின் செல்போனை திருட முயன்ற திருடனை சக பயணிகள் ரயில் ஜன்னல் வழியாக லாவகமாக பிடித்து 15 கிமீ தொங்கவிட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Bihar

பீகார் மாநிலம் பெகுசாராய் மாவட்டத்தை சேர்ந்த ரயில் பயணி ஒருவரிடம் அவர் ரயிலில் பயணித்து கொண்டிருக்கும் போது, ஒரு திருடன் ரயில் ஜன்னல் வழியாக பயணியின் செல்போனை பறித்து கொண்டு தப்ப முயன்றான்.

அந்த சமயம் சுதாரித்துக்கொண்ட சக பயணிகள், லாவகமாக ஜன்னல் வழியாக அந்த திருடனின் இரு கைகளையும் பிடித்துக்கொண்டனர் அப்போது ரயில் திடீரென நகர தொடங்கியது. வேறு வழி இல்லாமல் அந்த திருடன் தப்பிக்க முடியாமல் ரயிலுக்கு வெளியே தொங்கியபடி பயணம் செய்துள்ளான்.சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் தொங்கியபடி வந்த திருடன் அடுத்து ரயில் நிலையம் வந்ததும் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டான். அந்த திருடன், திருட முயன்று ரயில் பயணிகளிடம் மாட்டிக்கொண்டு , தன்னை விடுவிக்கும்படி தன்னை பிடித்து வைத்துள்ள பயணிகளிடம் கெஞ்சும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

From around the web