பாபா பைத்யநாத் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் பிரதமர் மோடி!!

 
Modi

ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் எய்ம்ஸ், விமான நிலையம் உட்பட சுமார் ரூ. 16,800 கோடி மதிப்பிலான பல வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர், 657 ஏக்கர் பரப்பளவில் ரூ. 401 கோடி செவில் கட்டப்பட்டுள்ள விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 

Modi

இதனை தொடர்ந்து, தியோகரில் உள்ள பாபா பைத்யநாத் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். பிரதமரின் வருகையையொட்டி, நாட்டிலுள்ள 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான பாபா பைத்யநாத் கோவில், பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் இன்று அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

'பைத்யநாத் தாம்' என்றும் அழைக்கப்படும் இக்கோயில் விளக்குகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோவிலின் விஐபி வாசலுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றவுடன், கோவிலில் சந்தியா ஆரத்தி செய்யும் 11 பூசாரிகள் குழுவால் அவருக்கு மலர்களால் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

Modi

அதன் பின்னர் அவர் பூஜை'க்காக கோவிலுக்கு உள்ளே அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து பூஜை மேற்கொண்டார். கோவிலின் கருவறையில், பூசாரிகளின் 'வேத மந்திரங்கள்' ஓதுவதற்கு மத்தியில் பிரதமர் மோடி பிரார்த்தனை செய்தார்.

From around the web