ஒரே இரவில் கோடீஸ்வரர்... மகனின் உண்டியலை உடைத்து லாட்டரி சீட்டு வாங்கிய ஆட்டோ ஓட்டுநர்!!

 
Kerala

கேரளாவில் லாட்டரி சீட்டு மூலம் ஒரே நாளில் ஒருவர் கோடீஸ்வரரான சம்பவம் நடந்து உள்ளது.

ஓணம் பண்டிகையையொட்டி கேரள அரசு இந்த ஆண்டு முதல் பரிசாக 25 கோடி ரூபாய் அறிவித்திருந்தது. ஒரு டிக்கெட்டின் விலை ரூ.500 ஆகும். 10 சீரியல்களில் மொத்தம் 67.50 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டன. 90 ஆயிரம் டிக்கெட்டுகள் தவிர அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனை ஆனது. இதன் மூலம் கேரள லாட்டரி துறைக்கு ரூ.330 கோடி வருமானம் கிடைத்தது.

இந்த நிலையில் ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல் நேற்று திருவனந்தபுரத்தில் நடந்தது. நிதி மந்திரி பாலகோபால் குலுக்கலை தொடங்கி வைத்தார். இதில் முதல் பரிசு ரூ.25 கோடி டி.ஜே. 750605 என்ற எண்ணுக்கு கிடைத்துள்ளது. அந்த லாட்டரி சீட்டை திருவனந்தபுரம், ஸ்ரீவராகம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அனூப் (44) என்பவர் வாங்கி இருந்தார்.

Kerala

இவரது குடும்பம் கடனால் கஷ்டப்பட்டு வந்துள்ளது. இதனால் வெளிநாட்டில் வேலை செய்து குடும்பத்தை காப்பாற்ற முடிவு செய்துள்ளார் அனுக். இதற்காக வெளிநாடு செல்ல அவர் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் 25 கோடி ரூபாய் பரிசு அவருக்கு விழுந்திருப்பது அவரது குடும்பத்தை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முதல் பரிசு ரூ.25 கோடி கிடைத்தது குறித்து அனூப் கூறுகையில், பம்பர் பரிசு ரூ.25 கோடி எனக்கு கிடைத்ததை நம்ப முடியவில்லை, மகிழ்ச்சியாக உள்ளது. ஆட்டோ ஓட்டி தொழில் நடத்தி வந்த எனக்கு தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் மலேசியாவில் வேலை பார்க்க செல்ல இருந்தேன். இனிமேல் அதற்கு அவசியம் இல்லை என்று கூறினார்.

kerala

அனூப் பம்பர் குலுக்கல் லாட்டரி சீட்டை நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு வாங்க கடைக்கு சென்றுள்ளார். அப்போது அவரிடம் ரூ.500 இல்லை. பணம் குறைவாக இருந்ததால், வீட்டுக்கு வந்து சேமித்து வைத்து இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தைத் எடுத்து சென்று லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். அந்த லாட்டரி சீட்டுக்குதான் தற்போது ரூ.25 கோடி பரிசு கிடைத்து உள்ளது. அவருக்கு வருமான வரி, ஏஜெண்டு கமிஷன் போக ரூ. 15.75 கோடி கிடைக்கும் என்று லாட்டரி உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

From around the web