காதலியின் கொடூர செயல்!! ஆந்திராவில் காதலனின் பிறப்புறுப்பை பிளேடால் வெட்டிய காதலி!

 
Andhra

ஆந்திராவில் பெண் ஒருவர் தனது காதலரின் ஆணுறுப்பை அறுத்து வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கொண்டபி மண்டலத்தின் முகசிந்தலா கிராமத்தைச் சேர்ந்தவர்  சி.எச்.ஹரிநாராயணன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சாகந்தி பத்மா என்பவருடன் நீண்ட நாட்களாகத் திருமணத்துக்குப் புறம்பான தொடர்பு இருந்துள்ளது.

man

இந்த நிலையில், வழக்கம்போல் கடந்த புதன்கிழமை அந்த பெண்ணின் வீட்டுக்கு சி.எச்.ஹரிநாராயணன் சென்றுள்ளார். சிறிது நேரம் நெருக்கமாக இந்த அந்த பெண், தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் ஹரிநாராயணன் பிறப்புறுப்பை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

பிறப்புறுப்பு வெட்டப்பட்டதால் ஏற்பட்ட வலியால் ஹரிநாராயணா அலறி கூச்சலிட்டபடி வெளியே ஓடினார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு ஓங்கோலில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஹரிநாராயணனுக்கு மனைவி இல்லாத நிலையில், அந்த பெண்ணுடன் நீண்ட நாட்களாக நெருங்கிய தொடர்பில் இருந்ததாக தெரிகிறது. 

Police

ஆனால், இருவருக்கும் இடையே பணத் தொடர்பு இருப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனர். சொத்துக்காகவா? அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக இந்த தாக்குதலை செய்தாரா என விவாதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவரின் புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக எஸ்எஸ்ஐ ராமகிருஷ்ணா தெரிவித்தார்.

From around the web