புதுச்சேரியில பரபரப்பு!! ரவுடியை ஓட ஓட வெட்டிய கும்பல்.!!

 
Puducherry

புதுச்சேரியில் ரவுடி ரிஷியை ஓட ஓட விரட்டி கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி யூனியன் நெல்லித்தோப்பு அருகே உள்ள சின்ன கொசப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி ரிஷி (25). இவர் மீது அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இவருக்கும் நெல்லித்தோப்பு பகுதியைச் சேர்ந்த சாலமன், வினோத் ஆகியோருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது.

murder

கடந்த ஆண்டு வினோத் மற்றும் சாலமனின் கூட்டாளிகளையும் ரிஷி தனது கூட்டாளிகளுடன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ரிஷி மீது வினோத்தும் சாலமனும் கடும் கோபத்தில் இருந்து வந்த்துடன், அவரை கொலை செய்யவும் திட்டமிட்டு இருந்தனர். ரிஷி எங்கெங்கு சென்று வருகிறார் என்பதையும் நோட்டமிட்டு வந்தனர்.

இந்த நிலையில் ரிஷி மது குடித்து விட்டு பெரியார் நகர் வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு தயாராக நின்று கொண்டிருந்த வினோத், சாலமன் மற்றும் இவர்களது கூட்டாளிகள் 4 பேர் ரிஷியை வழிமறித்தனர். தன்னை கொலை செய்ய கும்பல் வழிமறிப்பதை கண்ட ரிஷி அவர்களிடமிருந்து உயிர் தப்பிக்க ஓடினார். ஆனால் அந்த கும்பல் ஓட ஓட விரட்டி ரிஷியை கத்தியால் வெட்டியது.

investigation

இதில் ரத்த வெள்ளத்தில் ரிஷி மயங்கி சாய்ந்தார். உடனே அந்த கும்பல் ரிஷி இறந்து விட்டதாக கருதி அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் ரிஷியை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ரிஷி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து உருளையன் பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதில் சம்மந்தப்பட்ட ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

From around the web