சிறுவனை கடித்து குதறிய வளர்ப்பு நாய்; நாயுடன் போராடி மகனை மீட்ட தந்தை!

 
punjab

பஞ்சாப்பில் சிறுவனின் தந்தை நாயுடன் போராடி சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் கோட்லி பாம் சிங் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தான் வளர்க்கும் செல்லப்பிராணியான பிட்புல் வகை நாயுடன் வீதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வந்த 13 வயது சிறுவனைப் பார்த்து, பிட்புல் நாய் குரைத்துள்ளது.

pitbull

பின்னர் உரிமையாளரின் பிடியிலிருந்து பாய்ந்தோடிய நாய், சிறுவனை கடிக்கத் தொடங்கியது. இதைக்கண்ட அதிர்ச்சியடைந்த சிறுவனின் தந்தை, அவனை காப்பாற்ற முயற்சித்தார். நாயின் உரிமையாளர் நாயை கட்டுக்குள் கொண்டுவந்தார் எனத் தெரிகிறது.

கடைசியில் சிறுவனின் தந்தை, நாயிடமிருந்து சிறுவனைக் காப்பாற்றிவிட்டார். ஆனால், அதற்குள் நாய் சிறுவனின் முகம், காது ஆகிய இடங்களில் கடித்துவிட்டது. படுகாயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறான்.

சிறுவனின் காதில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மற்றபடி சிறுவன் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

From around the web