2 வாரத்தில் 3 பேர் அவுட்.. சோமேட்டோ இணை நிறுவனர் ராஜினாமா! 

 
Mohit-Gupta

சோமேட்டோ நிறுவனத்தின் இணை நிறுவனராக இருக்கும் மோஹித் குப்தா 4.5 வருடம் பணியாற்றிய பின்பு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகிப்பவராகவும் இருப்பவர் எலான் மஸ்க். இந்த நிலையில், பிரபல சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை கடந்த வாரம் எலான் மஸ்க் தன் வசப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து ட்விட்டரில் பணியாற்றி வந்த 7,500 ஊழியர்களில் சுமார் 4 ஆயிரம் பேரை பணியில் இருந்து அதிரடியாக நீக்கினார். 

Zomato

ட்விட்டரை தொடர்ந்து மொட்டா, அமேசான் ஆகிய நிறுவனங்களிலும் பெரும் ஆட்குறைப்பு செய்யப்பட்டன. இந்த வரிசையில் தற்போது சொமோட்டோவும் பலியாடாகியுள்ளது. சோமேட்டோ நிறுவனத்தின் இணை நிறுவனராக இருந்த மோஹித் குப்தா தற்போது ராஜினாமா செய்துள்ளார்.

2020-ல் இணை நிறுவனராக உயர்த்தப்பட்ட குப்தா, சோமேட்டோவில் அதன் உணவு விநியோக பிரிவின் தலைமை நிர்வாகியாகவும், அதன் புதிய முயற்சிகளின் தலைவர் என பல்வேறு பதவிகளை வகித்து வந்தார். இந்த நிலையில், கௌரவ் குப்தா மற்றும் மோஹித் குப்தா இருவரும் 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் இணை நிறுவனர்களாக பதிவு உயர்வு பெற்றனர். சொமோட்டோ நிறுவனத்தின் பங்குகள் குறைந்ததையடுத்து, இணை நிறுவனர் பதவியில் இருந்து மோஹித் குப்தா பதவி விலகினார். 

Mohit-gupta

சோமேட்டோவின் புதிய முன்முயற்சிகள் பிரிவின் தலைவரும் முன்னாள் உணவு விநியோகத் தலைவருமான ராகுல் கஞ்சூ இந்த வார துவக்கத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கு முன்பு சோமேட்டோ நிறுவனத்தின் இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ் சேவை பிரிவின் தலைவரான சித்தார்த் ஜாவர் ராஜினாமா செய்து நிறுவனத்தை விட்டு வெளியேறியதாக அறிவித்தார்.

From around the web