12 கி.மீ. இழுத்து சென்ற இளம்பெண் சடலம்.. நிர்வாணமாக கிடந்த சடலம்!! டெல்லியில் கொடூரம்!

 
delhi

டெல்லியில் இளம்பெண் மீது கார் ஒன்று மோதி அவரது உடலை சுமார் 12 கி.மீ. தூரம் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்த 20 வயதான இளம்பெண் அஞ்சலி சிங். இவர் நேற்று அதிகாலை சாலை விபத்தில் உயிரிழந்தார். வடமேற்கு டெல்லியின் கஞ்சவாலா பகுதியில், அவரது ஸ்கூட்டர் மீது, குடிபோதையில் 5 பேர் வந்த கார் மோதியது. அந்த பெண்ணின் உடைகள் காரின் சக்கரம் ஒன்றில் சிக்கியதால் விபத்து நடந்துள்ளது. ஐந்து பேர் காரை நிறுத்துவதற்குப் பதிலாக, உடலை 12 கி.மீ. வரை இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

கஞ்சவாலா என்ற சாலையில் கடை வைத்து இருக்கும் தீபக் டாஹியா என்ற நபர்தான் இந்த சம்பவத்தை நேரில் பார்த்து இருக்கிறார். புத்தாண்டு தினத்தன்று அதிகாலை அவர் கடையில்தான் தூங்கி இருக்கிறார். அவர் தூங்கிக்கொண்டு இருந்த போது வெளியே டமார் என்ற சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து வெளியே வந்து பார்த்தவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்து இருந்தது.

Delhi

வெளியே பலீனோ கார் ஒன்று முன் பக்கம் ஸ்கூட்டி ஒன்று இருந்தபடி தரதரவென்று தள்ளிக்கொண்டு சென்றுள்ளது. அந்த ஸ்கூட்டியில் பெண் ஒருவரும் இருந்துள்ளார். இந்த கார் அந்த பெண்ணை தரதரவென்று தள்ளிக்கொண்டு சாலையில் மிக வேகமாக சென்றுள்ளது. அந்த காரை நிறுத்த தீபக் டாஹியா முயன்றுள்ளார். ஆனால் எவ்வளவு முயன்றும் முடியவில்லை. இதையடுத்து உடனே போலீசுக்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார். அதிகாலை 3.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது.

10 நிமிடத்தில் மீண்டும் அந்த கார் அதே சாலையில் திரும்பி வந்துள்ளது. இந்த முறை ஸ்கூட்டி மிகவும் சேதம் அடைந்து இருந்தது. அந்த பெண்ணின் உடல் உறுப்புகள் கிழிந்து தொங்கிக்கொண்டு இருந்தன. இந்த முறையும் கார் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. 4 கி.மீ. உள்ள அந்த சாலையில் மீண்டும் மீண்டும் அந்த கார் 4-5 முறை முன்னும், பின்னும் சென்று வந்துள்ளது. சுமார் 20 கிமீ தூரத்திற்கு அந்த கார் பயணித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 3.30 மணியில் இருந்து 4.30 மணி வரை கார் முன்னும் பின்னும் சென்றுள்ளது.

இதையடுத்து போலீசாருக்கு வந்த தகவலின் அடிப்படையில் 4.40 மணிக்கு போலீசார் சுல்தான்புரி பகுதியில் அந்த பெண்ணின் உடலை மீட்டனர். கார் நம்பரை வைத்து, அந்த காரில் பயணம் செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். கிரெடிட் கார்ட் ஏஜென்ட், ரேஷன் கடை ஊழியர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

arrest

கைது செய்யப்பட்ட 5 பேரும் எங்களுக்கு எதுவுமே தெரியாது, நாங்கள் விபத்தை ஏற்படுத்தவில்லை. நாங்கள் காரில் சென்று கொண்டு இருந்தோம். உள்ளே பாட்டு போட்டுகொண்டு போய்க்கொண்டு இருந்தோம். அதனால் எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. எங்களை போலீஸ் கைது செய்த போதுதான் இந்த சம்பவமே எங்களுக்கு தெரிந்தது என்று கூறியுள்ளனர்.

அந்த பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார், அவரின் உடல் முழுக்க கடுமையாக சேதம் அடைந்துள்ளது. உடலின் உள் பாகங்கள் வெளியே கிழிந்து தொங்கியது. ஆடை மொத்தமாக கிழிந்துவிட்டது என்று என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன.

கொலை செய்யப்பட்ட பெண் அமர் விஹார் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு 4 தங்கைகள், 2 தம்பிகள் உள்ளனர். இந்த பெண்ணை அந்த 5 ஆண்களும் வன்புணர்வு செய்து கொலை செய்து இருக்கலாம் என்று பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அஞ்சலியின் தாயார் கூறும் போது எனது மகள் ஆடைகள் அணிந்திருந்தாள், ஆனால் அவள் உடலில் ஒரு ஒட்டு துணி கூட இல்லை,இது என்ன வகையான விபத்து? எங்கள் குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபர் எனது மகள் மட்டும் தான் என கூறி கதறி அழுதார்.

From around the web