250 பெண்களுக்கு 11,750 மணமகள்... பெண்கள் போட்ட கண்டிசனால் ஆடிப்போன இளைஞர்கள்!!

 
Mandya
விவசாய செய்யும் மணமகன் வேண்டாம் என பெண்கள் அளித்துள்ள விண்ணப்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஆதிசுஞ்சனகிரி மடத்தில் ஒக்கலிகர் சமுதாய சங்கத்தின் சார்பில் மாநாடு நடந்தது. இதில் அந்த சமுதாய ஆண், பெண்களுக்கு ஜாதக பரிவர்த்தனை நிகழ்ச்சி நடந்தது. ஆதிசுஞ்சனகிரி மடத்தில் நடந்த ஜாதக பரிவர்த்தனை நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். 
Marriage
இதில் கலந்து கொண்ட பெரும்பாலான இளைஞர்கள் விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதில் மொத்தம் 12 ஆயிரம் பேர் தங்கள் பெயர், விவரங்களை பதிவு செய்தனர். இதில் அதிகப்படியாக ஆண்கள் தான் திருமணத்திற்கு பெண்கள் தேடி பதிவு செய்திருந்தனர். பெண்கள் தரப்பில் குறைவான அளவே பதிவாகி இருந்தது. 
அதாவது 11 ஆயிரத்து 750 பேர், மணமகள் தேவை என்று பதிவு செய்திருந்தனர். அவர்களுக்கு போட்டியாக 250 இளம்பெண்கள் மட்டுமே பதிவு செய்திருந்தனர். இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பெரும்பாலான பெண்கள் படித்து தனியார் நிறுவனங்களில், அரசு அலுவலகங்களில் வேலை பார்க்கும் மணமகன் தான் வேண்டும் என்றும், விவசாயம் செய்யும் மணமகன் வேண்டாம் என்று கூறியுள்ளனர். 
Mandya
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் மண்டியா விவசாய பூமி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சம்பவம் சமுதாயத்தில் ஆண்களின் எண்ணிக்கைக்கு நிகராக பெண்கள் எண்ணிக்கை இல்லை என்பதையும் தெரியப்படுத்துகிறது.

From around the web