47வது மாநில துப்பாக்கி சுடுதல் போட்டி: 4 தங்கம் 2 வெண்கலம் வென்ற அஜித்குமார்!!

 
Ajith
திருச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் 4 தங்கம் 2 வெண்கலம் உள்பட 6 பதக்கங்களை நடிகர் அஜித் கைபற்றி உள்ளார்.
திருச்சியில் 47-வது மாநில துப்பாக்கி சுடும் போட்டி திருச்சி மாநகர் கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள திருச்சி ரைபிள் கிளப்பில் கடந்த 25-ம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 1,300-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
Ajith
இதில் சிறியவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என தரம் பிரிக்கப்பட்டு, சப் யூத் 16 வயது வரை, யூத் 19 வயது வரை, ஜூனியர் 21 வயது வரை, சீனியர் 21 முதல் 45 வயது வரை, மாஸ்டர் 45 முதல் 60 வயது வரை, சீனியர் மாஸ்டர் 60 வயதுக்கு மேல் என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது. 
பிஸ்டல் துப்பாக்கிச் சுடுவதற்கான போட்டி கடந்த 28-ம் தேதி வரை நடைபெற்றது. நேற்று ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டி நாளை (ஜூலை 31) வரை நடைபெறுகிறது.
இந்த போட்டியில் கடந்த 27-ந் தேதி நடிகர் அஜித்குமார் மாஸ்டர் பிரிவில் பங்கேற்றார். 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் என 3 சுடுதளத்திலும் பிஸ்டல் பிரிவு போட்டிகளில் கலந்து கொண்ட அவர் இலக்கை நோக்கி சுட்டார். இதையடுத்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற அஜித்குமார் அன்றைய தினம் இரவே திருச்சியில் இருந்து சென்னை புறப்பட்டு சென்றார்.
Ajith
இந்தப் போட்டியில் அஜித் அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர், 50 மீட்டர் பிரீ பிஸ்டல் மாஸ்டர் உள்ளிட்ட பிரிவுகளில் 4 தங்கம், 2 வெண்கலம் பதற்றம் வென்றுள்ளது அஜித் அணி. வெற்றி பெற்றவர்களுக்கு நாளை பரிசு வழங்கப்படுகிறது.

From around the web