தூர்தர்ஷனுக்குத் திரும்பும் 90’ஸ் கிட்ஸ்!

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்தப்பட்டிருக்கிறது. மக்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். சீரியல்களின் ஷூட்டிங் ரத்தானதை அடுத்து சீரியல் நேரங்களில் பழைய படங்களை ஒளிபரப்ப துவங்கியுள்ளன தனியார் தொலைக்காட்சிகள். இந்நிலையில், 21 நாட்களுக்கு தூர்தர்ஷன் ராமாயணத்தை ஒளிபரப்பு செய்வதாக அறிவித்திருந்தது. 90களில் பரபரப்பாக பேசப்பட்ட தொடர்களை மறுஒளிபரப்பு செய்ய பொதுமக்கள் பலர் தூர்தர்ஷனுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த கோரிக்கையை ஏற்று ராமாயணம், மகாபாரதம், உபநிஷத் கங்கா, சாணக்யா,
 

தூர்தர்ஷனுக்குத் திரும்பும் 90’ஸ் கிட்ஸ்!கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்தப்பட்டிருக்கிறது. மக்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

சீரியல்களின் ஷூட்டிங் ரத்தானதை அடுத்து சீரியல் நேரங்களில் பழைய படங்களை ஒளிபரப்ப துவங்கியுள்ளன தனியார் தொலைக்காட்சிகள். இந்நிலையில், 21 நாட்களுக்கு தூர்தர்ஷன் ராமாயணத்தை ஒளிபரப்பு செய்வதாக அறிவித்திருந்தது.

90களில் பரபரப்பாக பேசப்பட்ட தொடர்களை மறுஒளிபரப்பு செய்ய பொதுமக்கள் பலர் தூர்தர்ஷனுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த கோரிக்கையை ஏற்று ராமாயணம், மகாபாரதம், உபநிஷத் கங்கா, சாணக்யா, கிருஷ்ணா காளி, சர்க்கஸ், சக்திமான் ஆகிய தொடர்களை ஒளிபரப்ப தூர்தர்ஷன் முடிவு செய்திருக்கிறது.

தூர்தர்ஷன் இருக்க நெட்ஃபிலிக் மற்றும் அமேசான் ப்ரைம் இனி எதற்கு என்ற வாசகங்களுடன், #Shaktimaan ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.

A1TamilNews.com

 

From around the web