கொரோனா உக்கிரம்! தமிழகத்தில் 703 கட்டுப்பாட்டுப் பகுதிகள்!

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவை ஜூலை 31ம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளைத் தவிர ஏனைய இடங்களில் தளர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 703 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக அரசு ஆணையில் கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 104 இடங்கள், சேலத்தில் 84, திருவண்ணாமலையில் 72, கடலூரில் 64, மதுரையில் 57 இடங்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
 
கொரோனா உக்கிரம்! தமிழகத்தில் 703 கட்டுப்பாட்டுப் பகுதிகள்!கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவை ஜூலை 31ம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளைத் தவிர ஏனைய இடங்களில் தளர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 703 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக அரசு ஆணையில் கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 104 இடங்கள், சேலத்தில் 84, திருவண்ணாமலையில் 72, கடலூரில் 64, மதுரையில் 57 இடங்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. 
 
மேலும், நாகப்பட்டினம் 46, திருப்பத்தூர் 45, திருவள்ளூர் 38 , செங்கல்பட்டு 16, கோவை 7, திண்டுக்கல் 13, ஈரோடு 2, கள்ளக்குறிச்சி 11, காஞ்சிபுரம் 19, கன்னியாகுமரியில் 1 இடங்கள்  கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளன.
 
தவிர, கிருஷ்ணகிரி 5, புதுக்கோட்டை  2, ராமநாதபுரம் 10, ராணிப்பேட்டை 18, சிவகங்கை 6, தென்காசி 2, தஞ்சாவூர் 19, தேனி 4, திருவாரூர் 2, தூத்துக்குடி 4, நெல்லையில் 5, திருப்பூர் 26 இடங்கள் என மொத்தம் 29 மாவட்டங்களில் 703 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
 
நீலகிரி, நாமக்கல், தருமபுரி, திருச்சி, வேலூர், பெரம்பலூர், கரூர், அரியலூரில் என 8 மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை.
 

From around the web