தமிழகத்தில் 6.13 கோடி வாக்காளர்கள்! இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது!

இந்திய தேர்தல் ஆணையம் தமிழக்தின் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இறுதி வாக்காளர் பட்டியல் படி தமிழகத்தில் 6,13,06,638 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 3,02,54,172 பேரும், பெண் வாக்காளர்கள் 3,10,45,969 பேரும் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 6,474 பேர் உள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 6,60,317 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க www.nvsp.in என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் கூகிள் பிளே ஸ்டோரில்’ voter helpline
 

தமிழகத்தில் 6.13 கோடி வாக்காளர்கள்! இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது!

ந்திய தேர்தல் ஆணையம் தமிழக்தின் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இறுதி வாக்காளர் பட்டியல் படி தமிழகத்தில் 6,13,06,638 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில் ஆண் வாக்காளர்கள் 3,02,54,172 பேரும், பெண் வாக்காளர்கள் 3,10,45,969 பேரும் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 6,474 பேர் உள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 6,60,317 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க www.nvsp.in என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் கூகிள் பிளே ஸ்டோரில்’ voter helpline App’ ஐ டவுன்லோடு செய்து அதன்மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்த நிலையில் மாநகராட்சி, நகராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படாமல் இருக்கும் நிலையில் இது தொடர்பான வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம் இன்னமும் இறுதி வாக்காளர் பட்டியலை தயார் செய்து வெளியிடவில்லை.

இறுதி வாக்காளர் பட்டியல் தயாராகாததால் எங்களால் மாநகராட்சி, நகராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதிகளை அறிவிக்க முடியவில்லை என நேற்று மாநில தேர்தல் ஆணையம் பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

https://www.A1TamilNews.com

From around the web