சான்று எதுவும் இன்றி , ரேஷன் கார்டுகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் கடன்!அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி அறிவிப்பு!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் பல்வேறு தடுப்பு முறைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சரிந்த பொருளாதாரத்தை மீட்கவும், ஏழை, எளிய மக்களின் நலன் காக்கவும் தமிழக அரசு பல்வேறு அதிரடித் திட்டங்களையும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது சான்றுகள் எதுவும் சமர்ப்பிக்காமலேயே ரேஷன் கார்டுகள் மூலம் 50ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுக் கொள்ள முடியும் என்ற அதிரடி அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. கூட்டுறவு வங்கிகள் மூலம் இந்தக் கடனைப் பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு
 

சான்று எதுவும் இன்றி , ரேஷன் கார்டுகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் கடன்!அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி அறிவிப்பு!கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் பல்வேறு தடுப்பு முறைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சரிந்த பொருளாதாரத்தை மீட்கவும், ஏழை, எளிய மக்களின் நலன் காக்கவும் தமிழக அரசு பல்வேறு அதிரடித் திட்டங்களையும் அறிவித்து வருகிறது.

அந்த வகையில் தற்போது சான்றுகள் எதுவும் சமர்ப்பிக்காமலேயே ரேஷன் கார்டுகள் மூலம் 50ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுக் கொள்ள முடியும் என்ற அதிரடி அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.

கூட்டுறவு வங்கிகள் மூலம் இந்தக் கடனைப் பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு தனிப்பட்ட சான்றுகளோ, விளக்கங்களோ எதுவும் தேவையில்லை.

பொருளாதாரத்தில் மிகவும் பிந்தங்கிய நிலையில் இருக்கும் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதரத்தை மீட்டெடுக்கும் வகையிலும், சிறு,குறு தொழில் செய்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் பயனளிக்கும் வகையில் இந்த கடன் தொகை வழங்கப்படுகிறது என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web