அமெரிக்காவில் 5 மில்லியன் குழந்தைகள் கைகளில் இ-சிகரெட்… அதிர்ச்சி தகவல்!

வாஷிங்டன்: புகையிலை இல்லாத செயற்கை சுவையூட்டப்பட்ட இ-சிகரெட்களை 5 மில்லியன்கள் அமெரிக்கக் குழந்தைகள் பயன்படுத்துவதாக அமெரிக்க சுகாதாரத்துறை செயலாளர் அலெக்ஸ் அசார் கூறியுள்ளார். புகையிலைப் பழக்கத்தை நிறுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட பலதரப்பட்ட சுவையுள்ள இ-சிகரெட்கள், பள்ளிக் குழந்தைகள் கைகளுக்கு எளிதாகக் கிடைக்கிறது. அதிபர் ஒபாமா ஆட்சியின் போது புகையிலா இல்லாத இ-சிகரெட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த இ-சிகரெட்கள் குழந்தைகளுக்கும் எளிதாக கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்துவதால் நுரையீரல் தொடர்பான நோய்கள் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.
 

அமெரிக்காவில் 5 மில்லியன் குழந்தைகள் கைகளில் இ-சிகரெட்… அதிர்ச்சி தகவல்!

வாஷிங்டன்: புகையிலை இல்லாத செயற்கை சுவையூட்டப்பட்ட இ-சிகரெட்களை 5 மில்லியன்கள் அமெரிக்கக் குழந்தைகள் பயன்படுத்துவதாக அமெரிக்க சுகாதாரத்துறை செயலாளர் அலெக்ஸ் அசார் கூறியுள்ளார்.

புகையிலைப் பழக்கத்தை நிறுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட பலதரப்பட்ட சுவையுள்ள இ-சிகரெட்கள், பள்ளிக் குழந்தைகள் கைகளுக்கு எளிதாகக் கிடைக்கிறது. அதிபர் ஒபாமா ஆட்சியின் போது புகையிலா இல்லாத இ-சிகரெட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த இ-சிகரெட்கள் குழந்தைகளுக்கும் எளிதாக கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்துவதால் நுரையீரல் தொடர்பான நோய்கள் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. பெரியவர்களுக்கு சிகரெட் பழக்கத்தை கைவிடுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட புகையிலை இல்லாத இ-சிகரெட்கள் குழந்தைகளுக்கு கேடாக உருவெடுத்துள்ளது. அவைகளை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

முன்னதாக மெலனியா ட்ரம்ப், குழந்தைகள் இ-சிகரெட் பிடிக்கும் பழக்கம் அதிகரிப்பது வேதனை அளிக்கிறது . இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ட்விட்டர் மூலம் கூறியிருந்தார். அதையடுத்து, முன் திட்டம் இல்லாத போதும் வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அதிபர் ட்ரம்ப். செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப்,

“குழந்தைகளுக்கு இ-சிகரெட் பழக்கம் ஏற்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது. எங்கள் மகனின் தாயாராக, முதல் பெண்மணி மெலனியாவும் மிகுந்த  கவலை கொண்டுள்ளார். இதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெற்றோர்களுக்கு உறுதி அளிக்கிறேன்” என்றார்.

சுகாதாரத் துறை செயலாளர் அலெக்ஸ் அசார் கூறுகையில், “5 மில்லியன் குழந்தைகள் அமெரிக்காவில் இ-சிகரெட்களை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள். புகையிலை இல்லாத செயற்கையாக சுவையேற்றப்பட்ட இந்த இ-சிகரெட்கள் மூலம் பெரியவர்களுக்கு புகையிலை பழக்கத்தை கைவிட உதவியாக இருக்கும் என்று ஒபாமா அரசு அனுமதி வழங்கியது. இந்த இ-சிகரெட்களின் பக்க விளைவுகள், குழந்தைகளுக்கான ஆபத்து போன்ற பல விஷயங்களை அப்போது கணக்கில் எடுக்க வில்லை.

குழந்தைகளுக்கு இந்த இ-சிகரெட் கிடைக்கக்கூடாது. உரிய சட்டதிருத்தம் மேற்கொள்ளப்படும் வரையிலும் புகையிலை இல்லாத இ-சிகரெட்களுக்கு தடை விதிக்கப்படும். அதிபருக்கான அதிகார வரம்பிலேயே இதை செய்ய முடியும்.,” என்று தெரிவித்தார்.

அமெரிக்காவில் 5 மில்லியன் குழந்தைகள் கைகளில் இ-சிகரெட்… அதிர்ச்சி தகவல்!

அமெரிக்காவில் 5 மில்லியன் பள்ளிக் குழந்தைகள் செயற்கையாக சுவையூட்டப்பட்ட இ-சிகரெட்களை உபயோகிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன் சுவைக்காகவே பயன்படுத்துவதாக 80 சதவீத மக்கள் கூறியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கிறது.

இனிமேல் சுவையூட்டப்படாத, இயற்கையான புகையிலைக்கான இ-சிகரெட் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று ட்ரம்ப் சுகாதாரத்துறைச் செயலாளர்  கூறியுள்ளது, பெற்றோர்களுக்கு ஆறுதல் தரும். புகையிலைப் பொருட்கள் கடைகளில் குழந்தைகளுக்கு கிடைக்காது. ஒரு வேளை யாராவது கொடுத்தால் கடும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

– வணக்கம் இந்தியா

From around the web