டெக்சாஸ் துப்பாக்கிச்சூடு 5 பேர் பலி 21 பேர் படுகாயம்!

ஒடெசா: மேற்கு டெக்சாஸில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியாகி உள்ளனர். மூன்று போலீஸ் அதிகாரிகள் உட்பட 21 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேற்கு டெக்சாஸில் தேசிய நெடுஞ்சாலை ஐ 20 ல் சென்று கொண்டிருந்த ஒரு காரை சந்தேகத்தின் பேரில் நெடுஞ்சாலை போலீசார் நிறுத்தியுள்ளார். போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டு விட்டு அந்த நபர் காரை வேகமாக எடுத்துச் சென்றுள்ளார். வழியில் சென்ற கார்கள் மீதும் சுட்டுக்கொண்டே சென்ற நபர், அமெரிக்க தபால் துறைக்கு சொந்தமான
 

டெக்சாஸ் துப்பாக்கிச்சூடு 5 பேர் பலி 21 பேர் படுகாயம்!

ஒடெசா: மேற்கு டெக்சாஸில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியாகி உள்ளனர். மூன்று போலீஸ் அதிகாரிகள் உட்பட 21 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மேற்கு டெக்சாஸில் தேசிய நெடுஞ்சாலை ஐ 20 ல் சென்று கொண்டிருந்த ஒரு காரை சந்தேகத்தின் பேரில் நெடுஞ்சாலை போலீசார் நிறுத்தியுள்ளார். போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டு விட்டு அந்த நபர் காரை வேகமாக எடுத்துச் சென்றுள்ளார். வழியில் சென்ற கார்கள் மீதும் சுட்டுக்கொண்டே சென்ற நபர், அமெரிக்க தபால் துறைக்கு சொந்தமான வாகனத்தை மறித்து கைப்பற்றிக் கொண்டார்.

தபால் துறையின் வாகனத்தில் தப்பிச் சென்ற நபரை போலீசாரை துரத்தியதால், தேசிய நெடுஞ்சாலையிலிருந்து இறங்கி மாநில நெடுஞ்சாலை எண் 191ல் சென்றுள்ளார். கூடுதல்  போலீசாரும் சேர்ந்து துரத்தவே, அருகில் இருந்த சினிமா தியேட்டர் வளாகத்திற்குள் சென்று, சரமாரியாக துப்பாக்கியால் சுடத் தொடங்கியுள்ளார். 

அந்த நபர் மீது போலிசார் சுடத் தொடங்கியதும் , போலீசார் மீதும் சுட்டுள்ளார். கடைசியில் துப்பாக்கி நபரை போலீசார் சுட்டு வீழ்த்தியுள்ளனர். 3 போலீசார், 1 பச்சிளம் குழந்தை உட்பட 21 பேருக்கு துப்பாக்கிக்காயம் ஏற்பட்டுள்ளது. போலீசார் அறிவிப்பைத் தொடர்ந்து வழியெங்கும் கடைகள் முடப்பட்டன.

ஒடெசா, மிட்லண்ட் இரட்டை நகரங்களுக்கு இடையே இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்குள் நடந்த 3வது துப்பாக்கிச்சூடு சம்பவம் ஆகும். எல் பாசோ, டேட்டன் நகரங்களில் இதைப் போல் பொதுமக்கள் மீது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 30 பேருக்கும் மேலானோர் பலியாகினர்.

 

From around the web