சென்னையில் 3 லட்சத்து 65 ஆயிரம் பேர் வீட்டிலேயே தனிமையில்!!

சென்னையில் 3 லட்சத்து 65 ஆயிரம் பேர் வீட்டிலேயே தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார். “சென்னையில் வீடு, வீடாக நடத்தப்பட்டு வரும் காய்ச்சல் அறிகுறி கண்டறியப்படும் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரையிலும் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு சென்னையில் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 3 லட்சத்து 65 ஆயிரத்து 113 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தண்டையார்பேட்டை மண்டலத்தின் குடிசைப் பகுதிகளில் கொரோனா பாதிப்பு 10 சதவீதமாக உள்ளது. தொண்டு நிறுவனங்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இலவசமாக மறுபயன்பாட்டுடன்
 

சென்னையில் 3 லட்சத்து 65 ஆயிரம் பேர் வீட்டிலேயே தனிமையில்!!சென்னையில் 3 லட்சத்து 65 ஆயிரம் பேர் வீட்டிலேயே தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக  மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

“சென்னையில் வீடு, வீடாக நடத்தப்பட்டு வரும் காய்ச்சல் அறிகுறி கண்டறியப்படும் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரையிலும் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு சென்னையில் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 3 லட்சத்து 65 ஆயிரத்து 113 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தண்டையார்பேட்டை மண்டலத்தின் குடிசைப் பகுதிகளில் கொரோனா பாதிப்பு 10 சதவீதமாக உள்ளது. தொண்டு நிறுவனங்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இலவசமாக மறுபயன்பாட்டுடன் கூடிய முககவசங்கள் வழங்கப்படுகிறது.

தண்டையார் மண்டலத்தில் உள்ள 2 ஆயிரத்து 995 தெருக்களில், கடந்த 14 நாட்களாக 363 தெருக்களில் ஒரு பாதிப்பு ஏற்படவில்லை. மேலும் இதுவரையிலும் ஒரு பாதிப்பு கூட இல்லாத 157 தெருக்களில் ஒரு சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.” என்று மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறினார்.

A1TamilNews.com

 

From around the web