5.5 மில்லியன் டாலர்களைக் கடந்து ‘பேட்ட’ படத்துடன் போட்டிக்கு தயாராகிறது 2.0!

நியூஜெர்ஸி: அமெரிக்கப் படங்களுக்கு பெயர் போன நியூஜெர்ஸி ரீகல் காமர்ஸ் சென்டர் தியேட்டர் வளாகத்தில், 2.0 படம் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. 16 அரங்குகள் கொண்ட இந்த தியேட்டரில் அமெரிக்கப் படங்களே பெரும்பாலும் ஓடும். தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களுக்கும் அரங்கங்கள் ஒதுக்கப்படுவது உண்டு. கடந்த வாரத்தில் 6 இந்தியப் படங்கள் வெளிகிய நிலையிலும், புதன் கிழமை ப்ரீமியர் காட்சிகளுடன் வெளியாகும் பேட்ட படத்துடன் ரஜினிகாந்த் நடித்த 2.0 படம் இங்கு போட்டி போடுகிறது. ஒரே நாளில் அமெரிக்காவின்
 
நியூஜெர்ஸி: அமெரிக்கப் படங்களுக்கு பெயர் போன நியூஜெர்ஸி ரீகல் காமர்ஸ் சென்டர் தியேட்டர் வளாகத்தில், 2.0 படம் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. 16 அரங்குகள் கொண்ட இந்த தியேட்டரில் அமெரிக்கப் படங்களே பெரும்பாலும் ஓடும். தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களுக்கும் அரங்கங்கள் ஒதுக்கப்படுவது உண்டு.
 
கடந்த வாரத்தில் 6 இந்தியப் படங்கள் வெளிகிய நிலையிலும், புதன் கிழமை ப்ரீமியர் காட்சிகளுடன் வெளியாகும் பேட்ட படத்துடன் ரஜினிகாந்த் நடித்த 2.0 படம் இங்கு போட்டி போடுகிறது. ஒரே நாளில் அமெரிக்காவின் மிக முக்கியமான அமெரிக்கப் படங்களுக்கு பெயர் போன தியேட்டரில் ரஜினிகாந்த் நடித்த இரண்டு படங்கள் திரையிடப்படுவது, ஒரு வரலாற்று சாதனையாகும்.
 
வேறு எந்த இந்திய நடிகருக்கும் கிடைக்காத பெருமையாகவும் அமைந்துள்ளது. ரீகல் காமர்ஸ் சென்டர் திரையங்கம் தவிர இன்னும் நான்கு அமெரிக்க திரையரங்களுகளிலும் 2.0 படம் ஒடிக் கொண்டிருக்கிறது. இந்த தியேட்டர்களில் பேட்ட படமும் வெளியாகிறது.
 
80 களில் தமிழ்நாட்டில், ரஜினிகாந்த் நடித்த இரண்டு படங்கள் ஒரே தியேட்டர் வளாகத்தில் ஓடுவது வழக்கமாக இருந்தது. ரஜினிகாந்த் படத்திற்கு அவருடைய இன்னொரு படமே போட்டியாக வெளியாகிக் கொண்டிருந்தது.முப்பந்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதே சாதனையை ரஜினிகாந்தின் இரண்டு படங்கள் அமெரிக்காவில் செய்து கொண்டிருப்பது தான் மிகப்பெரிய அதிசயமாகும்.
 
சிறப்புக் கட்டுரையாளர் விதுரன், 
ரஜினியை முந்துபவர்… ரஜினி மட்டும்தான்!
என்று குறிப்பிட்டிருந்தது போல்   ‘ரஜினிக்கு ரஜினி தான் போட்டி ‘ என்று அமெரிக்காவிலும் நிருபணம் ஆகியுள்ளது. 
 
– வணக்கம் இந்தியா
 

From around the web