2020 சனி பெயர்ச்சி பலன்கள்.. மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு

சனி பெயர்ச்சி பலன்கள் (23-01-2020 முதல் 17-01-2023 வரை) நவக்கிரகங்களில் அதிக நாட்கள் ஒரு ராசியில் சஞ்சரிப்பது சனிக்கிரகம் மட்டுமே. இது கிட்டத்தட்ட ஒரு ராசியில் இரண்டரை ஆண்டு காலம் நடைபெறுவதினால் சனிப்பெயர்ச்சி முக்கியமாக கருதப்படுகிறது. இது வரை தனுசு ராசியொல் சஞ்சரித்து வந்த சனி, இப்போது 23-1-2020 முதல் மகர ராசியில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. மகர ராசி சனியினுடைய சொந்த வீடாகும். இது இராசி மண்டலத்தின் 10வது வீடாகும். இதனுடைய சின்னம் சுறாவாகும். இதனுடைய திசை தெற்காகும்.
 

சனி பெயர்ச்சி பலன்கள் (23-01-2020 முதல் 17-01-2023 வரை)

2020 சனி பெயர்ச்சி பலன்கள்.. மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு

நவக்கிரகங்களில் அதிக நாட்கள் ஒரு ராசியில் சஞ்சரிப்பது சனிக்கிரகம் மட்டுமே. இது கிட்டத்தட்ட ஒரு ராசியில் இரண்டரை ஆண்டு காலம் நடைபெறுவதினால் சனிப்பெயர்ச்சி முக்கியமாக கருதப்படுகிறது.

இது வரை தனுசு ராசியொல் சஞ்சரித்து வந்த சனி, இப்போது 23-1-2020 முதல் மகர ராசியில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. மகர ராசி சனியினுடைய சொந்த வீடாகும். இது இராசி மண்டலத்தின் 10வது வீடாகும். இதனுடைய சின்னம் சுறாவாகும். இதனுடைய திசை தெற்காகும். இது பூமி ராசியாகும். இந்த வீட்டில் உத்திராடம் 2, 3, 4 பாதங்களும் திருவோணத்தின் 4 பாதங்களும், அவிட்டத்தின் 1, 2 பாதங்களும் இருக்கிறது.

எல்லா கிரகங்களும் தான் இருக்கும் வீட்டிலிருந்து 7ம் பார்வையாக கிரகங்களையோ வீட்டையோ பார்க்கும். சனிக்கு விசேஷ பார்வையாக 3, 10ம் பார்வை உண்டு. எனவே சனி தான் இருக்கும் வீட்டிலிருந்து 3, 7, 10ம்  வீடுகளைப் பார்க்கும்.

இந்த பெயர்ச்சியில் சனி 3 தடவை வக்ரகதியில் இருக்கிறது. ஒவ்வொரு தடவையும் கிட்டத்தட்ட 5 மாதகாலம் வக்ர கதியில் இருக்கிறது. எனவே மொத்தம் 15 மாத காலம் சனி வக்ர கதியில் இருக்கிறது. சனியின் வக்ர கதியின் பலன்கள் நேர்கதியில் உள்ளது போல் அல்லாது வித்தியாசமாக இருக்கும். 

இனிமேல் இந்த சனிப்பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் என்னென்ன பலன்களைத் தரும் என்பதினைப் பார்ப்போம். 

இந்தப் பலன்கள் பொதுவானது ஆகும். தனிப்பட்ட ஜாதகத்தின் படியே பலன்கள் நடைபெறும். ஆனால் சனி திசையோ, சனி புத்தியோ ஜாதகத்தில் நடைபெறுமானால் இதன் பலன் சரியாக இருக்கும்.

மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

 இது வரை 9மிடத்தில் சஞ்சரித்து வந்த சனி இப்போது 10மிடத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. 10மிடம் தொழில், வேலை, மதிப்பு, செல்வாக்கு, பதவி, கர்மம் செய்தல் போன்றவைகளைக் குறிக்கிறது.
 
எனவே சனி 10மிடத்தில் சஞ்சரிக்கும் போது, வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். சில கர்ம காரியங்கள் செய்ய நேரிடும். 
 
சனி சஞ்சரிக்கும் நட்சத்திர சாரப்பலன்கள்
 
சனி 23-1-2020 முதல் 22-1-2021 வரை சூரியனுடைய நட்சத்திரமான உத்திராடத்தில் சஞ்சரிக்கிறது. இந்த காலக்கட்டத்தில் சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதத்தில் முன்னேற்றம் காணப்படும். பங்குச் சந்தை லாபம் தரும். சில காதல் விவகாரங்கள் குறுக்கிடும். அரசியல் ஈடுபாடு உண்டாகும். 
 
சனி 22-1-2021 முதல் 17-2-2022 வரை சந்திரனுடைய நட்சத்திரமான திருவோணத்தில் சஞ்சரிக்கிறது. இந்தக் காலக்கட்டத்தில் வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். பயிர்த் தொழில் நன்மை தரும். 
 
சனி 17-2-2022 முதல் 17-1-2023 வரை செவ்வாய் நட்சத்திரமான அவிட்டத்தில் சஞ்சரிக்கிறது. இந்த காலகட்டத்தில் தொழில் நஷ்டங்கள், வேலையில் பிரச்சனை, சகோதரர்களிடையே மனக்கசப்பு, நிலம் சம்மந்தமான வில்லங்கள் ஏற்படும். 
 
சனியின் பார்வையின் பலன்கள்
 
சனி தனது 3ம் பார்வையாக 12ம் வீட்டை பார்க்கிறது. இதனால் பண விரயங்கள் உண்டாக வாய்ப்புண்டு. வியாபாரம் சம்மந்தமான முதலீடுகள் செய்ய நேரிடும். இடமாற்றம், வெளியூர் பிரயாணம் உண்டாகும். 
 
சனி தனது 7ம் பார்வையாக 4ம் வீட்டை பார்ப்பதினால், நிலம், வீடு, வாகனம் மீது பணம் முதலீடு செய்ய நேரிடும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். நிலம் வாங்கும் போது பத்திரத்தை நன்றாக பரிசீலனை செய்து வாங்க வேண்டும். 
 
சனி தனது 10ம் பார்வையாக 7ம் வீட்டை பார்ப்பதினால் திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் ஆரம்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். 
 
சனியின் வக்ர கதியின் பலன்கள்
 
சனி 12-5-2020 முதல் 30-9-2020 வரையிலும் 24-5-2021 முதல் 12-10-2021 வரையிலும் 5-6-2022 முதல் 24-10-2022 வரையிலும் வக்ர கதியில் சஞ்சரிக்கிறது. 
 
இந்த காலக்கட்டத்தில் சிலருக்கு பதவி பறிபோகும். உத்தியோகத்திலிருந்து ஓய்வு கிடைக்கும். தொழில் லாபகரமாக இருக்காது. மதிப்பு, செல்வாக்கை காப்பாற்ற போரிட நேரிடும். அயல்நாட்டு பிரயாணம் ஏற்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் நன்மை தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஒப்பந்தக்காரர்கள் புது ஒப்பந்தம் பெறுவர். 
 
பரிகாரம்:  முருகப் பெருமானை சஷ்டியில் விரதமிருந்து வணங்கி வர பிரச்சனைகள் அணுகாது.
 

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)

இதுவரை அஷ்டமத்தில் சஞ்சரித்து வந்த சனி இப்போது 9மிடத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. எனவே இதுவரை அனுபவித்து வந்த துன்பங்கள் மறைந்து நன்மையான பலன்கள் நடைபெறும். 
 
அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் சிறப்பாக நடைபெறும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியில் வெற்றி பெறுவர். ஒப்பங்காரர்கள் புது ஒப்பந்தங்கள் பெற்று நல்ல லாபம் ஈட்டுவர்.
 
சனி சஞ்சரிக்கும் நட்சத்திர சாரப்பலன்கள்
 
சனி 23-1-2020 முதல் 22-1-2021 வரை சூரியனுடைய நட்சத்திரமான உத்திராடத்தில் சஞ்சரிக்கிறது. இந்த காலக்கட்டத்தில் வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.பயிர்த் தொழில் நன்மை தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். 
 
சனி 22-1-2021 முதல் 17-2-2022 வரை சந்திரனுடைய நட்சத்திரமான திருவோணத்தில் சஞ்சரிக்கிறது. சந்திரன் 3மிடத்து அதிபதி ஆவதினால் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். பிரயாணம் நன்மை தரும். குடும்பத்தில் பாகப்பிரிவினை உண்டாகும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். வானகம் செலவினங்களைத் தரும். 
 
சனி 17-2-2022 முதல் 17-1-2023 வரை செவ்வாய் நட்சத்திரமான அவிட்டத்தில் சஞ்சரிக்கிறது. செவ்வாய் 7, 12க்குரியது.  ஆகையால் திருமணம் நடைபெறும். கணவன், மனைவியிடையே சில மனஸ்தாபங்கள் உண்டாகும். கூட்டு வியாபாரத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். புதிய முதலீடுகள் செய்ய நேரிடும். 
 
சனியின் பார்வையின் பலன்கள்
 
சனி தனது 3ம் பார்வையாக 11ம் வீட்டைப் பார்க்கிறது. எனவே பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வரவேண்டிய பணம் வந்து சேரும். புது நண்பர்களின் வரவு மகிழ்ச்சியைத் தரும். மூத்த சகோதரர்களினால் நன்மை உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். 
 
சனி தனது 7ம் பார்வையால் 3ம் வீட்டை பார்க்கிறது. எனவே அயல்நாட்டு பிரயாணம் உண்டாகும். பழைய வாகனத்தை விற்று புது வாகனம் வாங்குவீர்கள். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். தபால் வழிக்கல்வி தொடரும். 
 
சனி தனது 10ம் பார்வையில் 6ம் வீட்டைப் பார்க்கிறது. எனவே வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தொழில் தொடங்க  கடன் பெற நேரிடும். 
 
சனியின் வக்ர கதியின் பலன்கள்
 
சனி 12-5-2020  முதல் 30-9-2020 வரையிலும் 24-5-2021 முதல் 12-10-2021 வரையிலும் 5-6-2022 முதல் 24-10-2022 வரையிலும் வக்ர கதியில் சஞ்சரிக்கிறது.
 
இந்த காலக் கட்டத்தில் தொழில் நஷ்டம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் நஷ்டத்தில் இயங்கும். தந்தையின் உடல்நலம் பாதிக்கும். சில பதவிகள் பறிபோகும். உத்தியோகத்தில் பிரச்சினைகள் ஏற்படும். 
 
பரிகாரம்: வெள்ளிக்கிழமை இராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கு ஏற்றி வர துன்பங்கள் விலகி ஓடும்.

மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

இதுவரை 7மிடத்தில் சஞ்சரித்து வந்த சனி இப்போது அஷ்டம ராசியான 8மிடத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. எனவே பிரச்சினைகள் மிகுந்து காணப்படும். மனக்கவலை அதிகரிக்கும். காரியத் தடைகள் உண்டாகும். வம்பு வழக்குகள் தேடிவரும்.  கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். விபத்து, அறுவை சிகிச்சை செய்ய நேரிடும். 
 
சனி சஞ்சரிக்கும் நட்சத்திர சாரப்பலன்கள்
 
சனி 23-1-2020 முதல் 22-1-2021 வரை சூரிய நட்சத்திரமாகிய உத்திராடத்தில் சஞ்சரிக்கிறது. சூரியன் 3ம் மிடத்து அதிபதியாகியாகையில் இடமாற்றம் ஏற்படும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் பாகப்பிரிவினை உண்டாகும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். 
 
சனி 22-1-2021 முதல் 19-2-2022 வரை சந்திரனுடைய நட்சத்திரமான திருவோணத்தில் சஞ்சரிக்கிறது.  சந்திரன் 2மிடத்து அதிபதி ஆவதினால் பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.
 
சனி 17-2-2022 முதல் 17-1-2023 வரை செவ்வாய் நட்சத்திரமான அவிட்டத்தில் சஞ்சரிக்கிறது. செவ்வாய் 6, 11மிடத்து அதிபதியாவதினால் வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக வரவேண்டிய பணம் வந்து சேரும். சில ஆசைகள் நிறைவேறும். 
 
சனியின் பார்வையின் பலன்கள்
 
சனி தனது 3ம் பார்வையால் 10ம் வீட்டை பார்க்கிறது. எனவே தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். சில கர்மங்கள் செய்ய நேரிடும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். 
 
சனி தனது 7ம் பார்வையில் 2ம் வீட்டை பார்க்கிறது. எதிர்பாராத பணம் கிடைக்கும். குறுக்கு வழியே பணம் தேட நேரிடும். 
 
சனி தனது 10ம் பார்வையால் 5ம் வீட்டை பார்ப்பதினால் சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குச்சந்தை லாபம் தரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். 
 
சனியின் வக்ர கதியின் பலன்கள்
 
சனி 12-5-2020 முதல் 30-9-2020 வரையிலும் 24-5-2021 முதல் 12-10-2021 வரையிலும் 5-6-2022 முதல் 24-10-2022 வரையில் வக்ர கதியில் சஞ்சரிக்கிறது. 
 
இந்த காலக்கட்டத்தில் திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் ஆரம்பிக்க வாய்ப்பு கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ஒப்பந்தக்காரர்கள் புது ஒப்பந்தம் பெறுவர். 
 
பரிகாரம்: புதன் கிழமை தோறும் பெருமாளை துதித்து வர பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். 
2020 சனி பெயர்ச்சி பலன்கள்.. மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு
 
மற்ற ராசிகளுக்கான சனி பெயர்ச்சி பலன்கள் தொடரும்
 

From around the web