2020 புத்தாண்டு பலன்கள் – கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு…

2020 புத்தாண்டு பலன்கள் முந்தைய ராசிகளுக்கான புத்தாண்டு பலன்கள் 2020 புத்தாண்டு பலன்கள் – மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு… கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்) புத்தாண்டு பிறக்கும் போது இராசிநாதன் சந்திரன் 8மிடத்தில் இருக்கிறது. இதனால் முயற்சிகளில் தடைகள் காணப்படும். மனக்கவலையும் குழப்பமும் அவ்வப்போது வந்து செல்லும். 2மிடத்து அதிபதி சூரியன் 6மிடத்தில் இருக்கிறது. எனவே பணவரவு தாராளமாக இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும்.
 

2020 புத்தாண்டு பலன்கள்

2020 புத்தாண்டு பலன்கள் – கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு…

முந்தைய ராசிகளுக்கான புத்தாண்டு பலன்கள்

2020 புத்தாண்டு பலன்கள் – மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு…

கடகம் (புனர்பூசம்ம் பாதம், பூசம், ஆயில்யம்)

புத்தாண்டு பிறக்கும் போது இராசிநாதன் சந்திரன் 8மிடத்தில் இருக்கிறது. இதனால் முயற்சிகளில் தடைகள் காணப்படும். மனக்கவலையும் குழப்பமும் அவ்வப்போது வந்து செல்லும்.

2மிடத்து அதிபதி சூரியன் 6மிடத்தில் இருக்கிறது. எனவே பணவரவு தாராளமாக இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் பிரிந்து செல்வர். குடும்பத்தில் நடக்கவிருந்த சுபகாரியம் தள்ளிப் போகும்.

3, 12க்குரிய புதன் 6மிடத்தில் இருப்பதினால் உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். பிரயாணம் ஏற்படும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். முதலீடுகள் லாபம் தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும்.

4, 11க்குரிய சுக்கிரன் 7மிடத்தில் இருப்பதினால் திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். நிலபுலன்கள் மூலம் பணவரவு உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தாயாரினால் நன்மை உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆசைகள் நிறைவேறும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள்.

5, 10க்குரிய செவ்வாய் 5மிடத்தில் இருப்பதினால் மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். சினிமா, சங்கீதத்தில் பெயர், புகழ் கிடைக்கும். பங்குச் சந்தை லாபகரமாக நடைபெறும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சி ஊட்டும்.

6, 9க்குரிய குரு 6மிடத்தில் இருப்பதினால், அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும்.

7, 8க்குரிய சனி 6 மிடத்தில் இருப்பதினால் திருமணத்தில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். கூட்டு வியாபாரத்தில் பிரிவு உண்டாகும்.

திசாநாதன் ராகு 12ல் இருப்பதினால் பணவிரயம் உண்டாகும். சில வம்பு வழக்குகள் தேடி வரும். இடமாற்றம் உண்டாகும். புத்திநாதன் செவ்வாய் நல்ல நிலையில் இருப்பதினால் கவலைப்பட தேவையில்லை. நன்மையே நடக்கும்.

பரிகாரம் : திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்து வந்தால் நல்ல திருப்பம் உண்டாகும்.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

இராசிநாதன் சூரியன் புத்தாண்டு பிறக்கும் போது 5மிடத்தில் இருக்கிறது. 5ம் வீடு மகிழ்ச்சி, கேளிக்கையை குறிப்பதினால் புத்தாண்டு மகிழ்ச்சிகரமாக இருக்கும். 

2, 11க்குரிய புதன் 5ம் வீட்டில் இருப்பதினால் பணம் பலவகைகளில் வந்து சேரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வங்கியில் நிதிநிலை உயரும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும்.  ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களும், நண்பர்களும் உதவிக்கரம் நீட்டுவர். ஆசைகள் நிறைவேறும். நீண்ட நாட்களாக வரவேண்டிய  பணம் வந்து சேரும். 

3,10க்குரிய சுக்கிரன் 6மிடத்தில் இருக்கிறது. இதனால் வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பு, செல்வாக்கு உயரும். 

4, 9க்குரிய செவ்வாய் 4மிடத்தில் இருப்பதினால் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வீடு, நிலம் வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். பயிர்த் தொழில் நல்ல லாபம் தரும்.  அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சிகளில் வெற்றி பெறுவர். ஒப்பந்தக்காரர்கள் புது ஒப்பந்தம் பெறுவர்.

3, 8க்குரிய குரு 5மிடத்தில் இருப்பதினால் சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். 

6, 7க்குரிய சனி 5மிடத்தில் இருப்பதினால் சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். பங்குச் சந்தை லாபம் தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். 

திசாநாதன் 11மிடத்திலும் புத்திநாதன் 4மிடத்திலும் இருப்பதினால் பணவரவு தாராளமாக இருக்கும். நினைத்த காரியத்தை சாதிக்க முடியும். எல்லா ஆசைகளும் நிறைவேறும். நிலம், வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். 

பரிகாரம் : ஞாயிறு தோறும் சிவனை வழிபட்டு வர செல்வம் பெருகும்

கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)

இராசிநாதன் புதன் புத்தாண்டு பிறக்கும் போது 4மிடத்தில் இருக்கிறது. எனவே இந்த ஆண்டு மகிழ்ச்சியான ஆண்டாக அமையும். சொத்துக்கள் வாங்கி குவிக்கப் போகிறீர்கள்.

2, 9க்குரிய சுக்கிரன் 5மிடத்தில் இருப்பதினால் பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உறவினர்களின் வரவு ஆனந்தத்தைத் தரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதி நிலை உயரும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.  ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெறுவர்.  ஒப்பந்தக்காரர்கள் புது ஒப்பந்தம் பெறுவர். 

3, 8க்குரிய செவ்வாய் 3மிடத்தில் இருப்பதினால் இடமாற்றம் உண்டாகும். அடிக்கடி பிரயாணம் உண்டாகும். குடும்பத்தில் பாகப்பிரிவினை ஏற்படும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். லாட்டரி லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். 

4, 7க்குரிய குரு 4மிடத்தில் இருப்பதினால் நிலம், வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். பயிர்த் தொழில் லாபகரமாக இருக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கூட்டு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

5, 6க்குரிய சனி 4மிடத்தில் இருப்பதினால் காதல் விவகாரத்தில் ஊடல்கள் ஏற்படும். குழந்தையின் உடல்நலம் பாதிக்கும். உத்தியோகத்தில் பிரச்சனைகள் உண்டாகும். சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும். 

1, 10க்குரிய புதன் 4மிடத்தில் இருப்பதினால் தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். 

12க்குரிய சூரியன் 4மிடத்தில் இருப்பதினால்  புதிய முதலீடுகள் செய்ய நேரிடும். பழைய வாகனத்தை விற்று புது வாகனம் வாங்க முடியும். முதலீடுகள் நல்ல லாபம் தரும். 

பரிகாரம்: வீட்டில் தினசரி விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வர நன்மைகள் தேடி வரும்.

2020 புத்தாண்டு பலன்கள் – கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு…

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com
 
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கான பலன்கள் நாளை தொடரும்…

From around the web