2020 புத்தாண்டு பலன்கள் – மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு..

ராகு திசை இருப்பு 0 வருடம் 10 மாதம் 10 நாள் 2020 புத்தாண்டு பொதுப்பலன் புத்தாண்டு கும்ப ராசி, சதயம் நட்சத்திரம், கன்னி லக்னத்தில் பிறக்கிறது. பொதுவாக இந்த ஆண்டு நல்ல பலன்களை அதிகமாக எதிர்பார்க்கலாம். போக்குவரத்துத் துறை மேம்படும். ரியல் எஸ்டேட் புத்துயிர் பெறும். வாகன உற்பத்தி அதிகமாகும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். விவசாயம் செழிக்கும். அயல்நாட்டினுடைய உறவு நன்றாக இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் சிறப்பாக நடைபெறும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். நீரினால்
 

ராகு திசை இருப்பு 0 வருடம் 10 மாதம் 10 நாள்

2020 புத்தாண்டு பலன்கள் – மேஷம், ரிஷபம், மிதுனம்  ராசிகளுக்கு..

2020  புத்தாண்டு பொதுப்பலன்

புத்தாண்டு கும்ப ராசி, சதயம் நட்சத்திரம், கன்னி லக்னத்தில் பிறக்கிறது. பொதுவாக இந்த ஆண்டு நல்ல பலன்களை அதிகமாக எதிர்பார்க்கலாம். போக்குவரத்துத் துறை மேம்படும். ரியல் எஸ்டேட் புத்துயிர் பெறும். வாகன உற்பத்தி அதிகமாகும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். விவசாயம் செழிக்கும். அயல்நாட்டினுடைய உறவு நன்றாக இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் சிறப்பாக நடைபெறும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். நீரினால் சில அழிவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இயற்கையின் சீற்றம் அதிகமாக இருக்கும். ஒரு சில பெரிய விபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு. தனிப்பட்ட மனிதரின் வருமானம் அதிகரிக்கும்.

இனி ஒவ்வொரு ராசிக்கான பலன்களைப் பார்ப்போம்

மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

புத்தாண்டு பிறக்கும் போது 5 கிரகங்கள் ஒன்பதாம் வீட்டில் இருக்கின்றன. எனவே இந்த ஆண்டு அயல்நாடு சென்று வர வாய்ப்பு கிடைக்கும். உயர்கல்விக்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் சிறப்பாக நடைபெறும். ஒப்பந்தக்காரர்களுக்கு புது ஒப்பந்தம் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும்.

இராசி அதிபதி செவ்வாய் அஷ்டமத்தில் இருப்பதினால் முயற்சிகளில் தடைகள் காணப்படும். உடல்நலம் பாதிக்கப்படும். விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதினால் வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை.

3மிடம் மற்றும் 6மிடத்து அதிபதி புத்ன் 9மிடத்தில் இருப்பதினால் உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக இயங்கும்.

5க்குரிய சூரியன் 9மிடத்தில் இருப்பதினால் சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். பங்குச் சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத் தரும்.

2 மற்றும் 7மிடத்து அதிபதி சுக்கிரன் 10மிடத்தில் சஞ்சரிப்பதினால் திருமணம் கைகூடி வரும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும்.

புத்தாண்டு பிறக்கும் போது ராகு திசை செவ்வாய் புத்தி நடைபெறுகிறது. இராகு 3மிடத்தில் இருக்கிறது. எனவே இடமாற்றம் உண்டாகும். அடிக்கடி பிரயாணம் ஏற்படும். குடும்பத்தில் பாகப்பிரிவினை உண்டாகும்.

செவ்வாய் 8மிடத்தில் இருப்பதினால், சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். அடிக்கடி மனக்கவலை உண்டாகும்.

பரிகாரம்:  செவ்வாய்கிழமைகளில் முருகப் பெருமானை வழிபட செல்வம் பெருகும்.

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)

புத்தாண்டு பிறக்கும் போது இராசி அதிபதி சுக்கிரன் 9மிடத்தில் இருக்கிறது. எனவே அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். ஆன்மீகப் பிரயாணம் ஏற்படும்.

2, 5க்குரிய புதன் 8மிடத்தில் இருப்பதினால், குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்களிடையே பகைமை உண்டாகும். வீண் பணவிரயம் உண்டாகும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. பங்குச் சந்தை நஷ்டம் தரும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும்.

4மிடத்து சூரியன் 8மிடத்திலிருப்பதினால் வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டத்தில் இயங்கும். நிலங்கள், வீடுகள் சம்மந்தமான வில்லங்கங்கள் ஏற்படும்.

7, 12க்குரிய செவ்வாய் 7மிடத்தில் இருப்பதினால் திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் ஆரம்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகள் காணப்படும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும்.

8, 11க்குரிய குரு 8மிடத்தில் இருப்பதினால் உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப், பணம் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபப் பங்கு கிடைக்கும். நண்பர்களிடையே மனக்கசப்பு உண்டாகும்.

9, 10க்குரிய சனி 8மிடத்தில் இருப்பதினால் அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உயர்கல்வியில் தடைகள் காணப்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நஷ்டம் தரும். சில பதவிகள் பறிபோகும். இந்நிலை ஜனவரி 24க்குப் பின் சனி மாறும் போது சாதகமாக மாறும்.

ராகு திசை செவ்வாய் புத்தி நடைபெறுகிறது. இராகு 2மிடத்தில் இருப்பதினால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டாலும், சில பணவரவும் உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் பராசக்தியை வழிபட்டு வர எல்லாம் நன்மையில் முடியும்.

மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

புத்தாண்டு பிறக்கும் போது இராசி அதிபதி புதன் 7மிடத்தில் இருக்கிறது. முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். பயிர்த் தொழில் லாபகரமாக இருக்கும்.

3மிடத்து அதிபதி சூரியன் 7மிடத்தில் இருப்பதினால் அடிக்கடி பிரயாணம் ஏற்படும். இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக இருக்கும். திருமண ஒப்பந்தங்கள் ஏற்படும்.

5, 12க்குரிய சுக்கிரன் 8மிடத்தில் இருப்பதினால், குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. பங்குச் சந்தை நஷ்டம் தரும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும்.

6, 11க்குரிய செவ்வாய் 6மிடத்தில் இருப்பதினால் வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும். நண்பர்களிடையே சில பிரச்சினை உண்டாகும். சில ஆசைகள் நிறைவேறும்.

7, 10க்குரிய குரு 7மிடத்தில் இருப்பதினால் திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் ஆரம்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். சில பதவிகள் தேடி வரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

8, 9க்குரிய சனி 7மிடத்தில் இருப்பதினால் அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். ஒப்பந்தக்காரர்கள் புது ஒப்பந்தம் பெறுவர்.

திசாநாதன் ராகு இராசியிலேயே இருப்பதினால் நல்ல பலன்களைத் தரும். அயல்நாட்டுப் பிரயாணங்கள் போன்றவை கைகூடும். புத்திநாதன் செவ்வாய் 6மிடத்தில் இருப்பதினால் இந்த ஆண்டு நல்ல பணவரவைத் தரும். எதிலும் வெற்றியைத் தரும். உடல்நலத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.

பரிகாரம்: புதன்கிழமைகளில் பெருமாளை வணங்கி வர எல்லா நன்மைகளும் வந்து சேரும்.

2020 புத்தாண்டு பலன்கள் – மேஷம், ரிஷபம், மிதுனம்  ராசிகளுக்கு..

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com
கடகம், சிம்மம்,  கன்னி ராசிகளுக்கான பலன்கள் நாளை தொடரும்…

 

From around the web