கோரத்தாண்டவம் ஆடிய சுனாமியின் 15வது ஆண்டு நினைவு தினம்!

சுனாமி கோரத்தாண்டவத்தின் 15வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தினர். 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி சுனாமி ஆழிப்பேரலையில் சிக்கி தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அதன் நினைவாக கடலூர் மாவட்ட சிங்காரத்தோப்பு மீனவர்கள் பேரணியாகச் சென்று கடலில் மலர்தூவி, பால் ஊற்றி, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். சுமார் 49 கிராமங்களைச் சேர்ந்த
 

கோரத்தாண்டவம் ஆடிய சுனாமியின் 15வது ஆண்டு நினைவு தினம்!

சுனாமி கோரத்தாண்டவத்தின் 15வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தினர்.

2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி சுனாமி ஆழிப்பேரலையில் சிக்கி தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அதன் நினைவாக கடலூர் மாவட்ட சிங்காரத்தோப்பு மீனவர்கள் பேரணியாகச் சென்று கடலில் மலர்தூவி, பால் ஊற்றி, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். சுமார் 49 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்‌லவில்லை.

இதேபோல் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் விதமாக, கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கடலில் பால் ஊற்றி, மலர்வளையம் வைத்து அஞ்சலில் செலுத்தினார்.

பின்னர்‌ மெழுகுவர்த்தி ஏற்றி 1 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது‌. இதில் ஏராளமான மீனவ கிராம‌‌ மக்கள் பங்கேற்றனர். வேதாரண்யம் தாலுகாவில் ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10 கிராம மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் உள்‌ளனர்.

சீர்காழியில் 26 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் சீர்காழி முதல் தரங்கம்பாடி வரை பேரணியாகச் சென்று சுனாமி நினைவு தூணிற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் மீனவர்கள், வியாப‌ரிகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தூத்துக்குடியில் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் கடலுக்குச் செல்லவில்லை. திரேஸ்புரம் கடற்பகுதியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும், கடலில் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவு பூங்காவில் ஏராளமான பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி, மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் புதுபட்டினம்,சட்ராஸ்,‌ மாமல்லபுரம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்‌லவில்லை.

https://www.A1TamilNews.com

 

 

From around the web