நீட் தேர்வில் தோல்வி… இரு தமிழக மாணவிகள் தற்கொலை!

திருப்பூர்: நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால், திருப்பூர் மற்றும் பட்டுக்கோட்டையில் 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில், தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. திருப்பூர் மாணவி தற்கொலை இந்நிலையில், மதிப்பெண் குறைந்ததால் திருப்பூர் மாவட்டம் வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த ரிதுஸ்ரீ என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை
 

திருப்பூர்: நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால், திருப்பூர் மற்றும் பட்டுக்கோட்டையில் 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில், தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.

திருப்பூர் மாணவி தற்கொலை

இந்நிலையில், மதிப்பெண் குறைந்ததால் திருப்பூர் மாவட்டம் வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த ரிதுஸ்ரீ என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பத்தாம் வகுப்பில் 500-க்கு 461 மதிப்பெண் எடுத்திருந்த இவர், பிளஸ் டூவில் 600-க்கு 490 மதிப்பெண்கள் எடுத்திருந்தார்.

மருத்துவக் கனவோடு நீட் தேர்வு எழுதிய இவர், நேற்று வெளியான முடிவுகளை பார்த்தபோது 68 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார். இதனால் மனமுடைந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

பட்டுக்கோட்டை மாணவி தற்கொலை

இதேபோல், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைசியா என்ற மாணவியும், நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

தமிழகமே வேண்டாம் என அலறிய நீட் தேர்வால் கடந்த ஆண்டு அரியலூர் அனிதா பலியானார். இந்த ஆண்டு அடுத்தடுத்து இரு மாணவிகள் தங்கள் உயிரை மாய்த்து கொண்டுள்ள சம்பவம் மக்களை கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

– வணக்கம் இந்தியா

From around the web