சீனாவுக்கு எதிராக ஹாங்காங்கில் திரண்ட 17 லட்சம் பேர்!

ஹாங்காங்: ஹாங்காங்கில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை சீனாவுக்குக் கொண்டு சென்று விசாரிக்க அனுமதிக்கும் மசோதாவை நிரந்தரமாக நீக்கக்கோரி ஹாங்காங்கில் லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆரம்பத்தில் வார இறுதி நாட்களில் மட்டும் நடந்த போராட்டம் தற்போது மற்ற நாட்களிலும் தொடர்கிறது. சென்ற வாரம் விமான நிலையத்துக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதால் கலவரம் மூண்டது. இதில் பொதுமக்கள் பலரும் காயமடைந்தனர். இதன் விளைவாக 2 நாட்கள் சர்வதேச விமானப்போக்குவரத்து
 

ஹாங்காங்: ஹாங்காங்கில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை சீனாவுக்குக் கொண்டு சென்று விசாரிக்க அனுமதிக்கும் மசோதாவை நிரந்தரமாக நீக்கக்கோரி ஹாங்காங்கில் லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆரம்பத்தில் வார இறுதி நாட்களில் மட்டும் நடந்த போராட்டம் தற்போது மற்ற நாட்களிலும் தொடர்கிறது. சென்ற வாரம் விமான நிலையத்துக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதால் கலவரம் மூண்டது.

இதில் பொதுமக்கள் பலரும் காயமடைந்தனர். இதன் விளைவாக 2 நாட்கள் சர்வதேச விமானப்போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சீனா, தீவிரவாதிகள் போல போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்துவதாகக் குற்றம் சாட்டியது.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஹாங்காங் காஸ்வே பகுதியில் நேற்று நடந்த பேரணியில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

ஹாங்காங் தலைவர் கேரி லேம் கேட்டுக்கொண்டதால் தாங்கள் அமைதியான முறையில் பேரணி நடத்தி வருவதாகவும் தங்களது கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும் என்றும் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர்.

 

From around the web