நாங்குநேரி தொகுதியில் தேர்தலை புறக்கணித்த 13 கிராமங்கள்!

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் வாழும் 13 கிராமங்கள் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளனர். தேவேந்திரகுல சமூகத்தைச் சேர்ந்த 7 உட்பிரிவு சாதியினரை பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற்றி தேவேந்திர குல வேளாளர் பட்டியலில் இணைத்து அரசாணை வெளியிடவேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றக் கோரி மள்ளர் சமூகத்தினர் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி தேர்தலை புறக்கணித்திருக்கிறார்கள். 90ஆண்டு கால கோரிக்கையான பட்டியல் இன வெளியேற்றத்தையும், 30ஆண்டு கால கோரிக்கையான தேவேந்திரகுல வேளாளர் அரசாணையையும் நிறைவேற்றாமல் ஆட்சியாளர்கள்
 

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் வாழும் 13 கிராமங்கள் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

தேவேந்திரகுல சமூகத்தைச் சேர்ந்த 7 உட்பிரிவு சாதியினரை பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற்றி தேவேந்திர குல வேளாளர் பட்டியலில் இணைத்து அரசாணை வெளியிடவேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றக் கோரி மள்ளர் சமூகத்தினர் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி தேர்தலை புறக்கணித்திருக்கிறார்கள். 90ஆண்டு கால கோரிக்கையான பட்டியல் இன வெளியேற்றத்தையும், 30ஆண்டு கால கோரிக்கையான தேவேந்திரகுல வேளாளர் அரசாணையையும் நிறைவேற்றாமல் ஆட்சியாளர்கள் காலதாமதப்படுத்தி வந்ததாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தேர்தல் காலத்தில் மள்ளர் சமூகத்தினரின் வாக்கு வங்கியை குறிவைத்து பட்டியல் வெளியேற்றம் மற்றும் அரசாணை கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி தருவதும், ஆட்சிக்கு வந்ததும் வாக்குறுதியை நிறைவேற்றாமல் சாக்கு சொல்லியும் தட்டிக் கழிப்பதும் தொடர் கதையாக இருக்கிறது. தமிழகத்தை மாறி மாறி ஆட்சி புரியும் திராவிட கட்சிகள் மள்ளர் சமூகத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலதாமதப்படுத்தியதன் விளைவு இன்று நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தல் புறக்கணிப்பில் வந்து நிற்கிறது.

இனியாவது நாங்குநேரி மள்ளர் சமூக மக்களின் கருப்புக் கொடிப் போராட்டத்தையும், பட்டியல் வெளியேற்றம் மற்றும் அரசாணை கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து தமிழர் குடிகளும், தமிழர் அமைப்புகளும் தமது ஆதரவை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

From around the web