12 வது ஆண்டாக ‘ஒரு குறள் ஒரு டாலர்’ திருக்குறள் போட்டி! 26 மாத பச்சிளம் குழந்தை சொன்ன 17 ஆத்திச்சூடிகள்!

டல்லாஸ்: ஒரு குறள் சொன்னால் ஒரு டாலர் பரிசு வழங்கும் திருக்குறள் போட்டி 12வது ஆண்டாக டல்லாஸ் நகரில் நடைபெற்றுள்ளது. சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் சார்பில் நடந்த இந்தப் போட்டியுடன், ஆத்திச்சூடி, கட்டுரை, பேச்சுப் போட்டிகளும் நடைபெற்றது. குழந்தைகள், பெரியவர்கள் என 150 பேர் பங்கேற்ற திருக்குறள் போட்டியில் 6500 தடவை திருக்குறள்கள் ஓதப்பட்டுள்ளன. மூன்றாம் நிலையில் 12 வயது அபினவ் குமரகுருராஜ் 529 திருக்குறள்கள் சொல்லி முதல் பரிசையும் சிறப்புப் பரிசையும் பெற்றார். 451 குறள்கள்
 

12 வது ஆண்டாக ‘ஒரு குறள் ஒரு டாலர்’ திருக்குறள் போட்டி! 26 மாத பச்சிளம் குழந்தை சொன்ன 17 ஆத்திச்சூடிகள்!

டல்லாஸ்: ஒரு குறள் சொன்னால் ஒரு டாலர் பரிசு வழங்கும் திருக்குறள் போட்டி 12வது ஆண்டாக டல்லாஸ் நகரில் நடைபெற்றுள்ளது. சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் சார்பில் நடந்த இந்தப் போட்டியுடன், ஆத்திச்சூடி, கட்டுரை, பேச்சுப் போட்டிகளும் நடைபெற்றது.
 
குழந்தைகள், பெரியவர்கள் என 150 பேர் பங்கேற்ற திருக்குறள் போட்டியில் 6500 தடவை திருக்குறள்கள் ஓதப்பட்டுள்ளன. மூன்றாம் நிலையில் 12 வயது அபினவ் குமரகுருராஜ் 529 திருக்குறள்கள் சொல்லி முதல் பரிசையும் சிறப்புப் பரிசையும் பெற்றார்.
12 வது ஆண்டாக ‘ஒரு குறள் ஒரு டாலர்’ திருக்குறள் போட்டி! 26 மாத பச்சிளம் குழந்தை சொன்ன 17 ஆத்திச்சூடிகள்!
451 குறள்கள் சொல்லி அசத்திய 10 வயது அபிராமி இளங்கோவன், இரண்டாம் நிலையில் முதல் பரிசை தட்டிச் சென்றார். 7 வயது மித்ரா கஜேந்திரன் 100 குறள்களுடன் முதல்நிலையில் முதல் பரிசு பெற்றார்.  மழலைகள் பிரிவில் 3 வயது அர்ஜுன்ஸ்ரீ சுந்தராஜ லஷ்மணன் 38 குறள்கள் சொல்லி வென்றார்.
 
5 குறள்கள் ஓதிய இரண்டே வயதான ஆதி ஸ்ரீனிவாசன் தான் இளம் பங்கேற்பாளர் ஆவார்.  மூத்த பங்கேற்பாளர் 74 வயது விஜலஷ்மி கிருஷ்ணன் ஆர்வத்துடன் 25 திருக்குறள்கள் சொல்லி பாராட்டுகளைப் பெற்றார். பெரியவர்கள் பிரிவில் 430 திருக்குறள்கள் சொன்ன சசிரேகா வெற்றியாளர் ஆவார்.
60 குழந்தைகள் ஆர்வத்துடன் ஆத்திச்சூடி போட்டியில் கலந்து கொண்டனர். அதில் 15க்கும் மேற்பட்டோர் அவ்வையாரின் அனைத்து 109 ஆத்திச்சூடிகளையும் அச்சு பிசகாமல் சொல்லி அசத்தியுள்ளார்கள். 4 வயது பவிகா சதிஷ்குமார் மழலைப் பிரிவில் வெற்றி பெற்றார். 33 மாதம் நிரம்பிய துருவ் இசக்கியப்பன் 65 ஆத்திச்சூடிகள் சொல்லி சிறப்பு பரிசு வென்றார். 21 மாதங்களே ஆன பச்சிளம் குழந்தை குமரன் சுப்ரமணியனும் 17 ஆத்திச்சூடிகள் சொல்லி அசத்தியுள்ளார்.
 
என் தமிழ்ப் பள்ளி , தமிழில் எனக்கு என்ன பிடிக்கும், ஐயம் இட்டு உண், சுற்றத்திற்கு அழகு சூழ்ஞ் இருத்தல், மரம் வளர்ப்போம் – ஏன்?, இளமையில் கல், கஜாப் புயலும் விவசாயியும், ரௌத்திரம் பழகு என்ற தலைப்புகளில் கட்டுரைப் போட்டி நடைபெற்றது. 71வயது பி.எஸ்.ராஜகோபாலன் பெரியவர்கள் பிரிவில் முதல் பரிசை வென்றார். கடும் போட்டிக்கிடையே 0.2 மதிப்பெண்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் யார் என தீர்மானிக்கப்பட்டது. குழந்தைகளுக்கான கட்டுரைப் போட்டியில் சாம்பவி குமரகுருராஜ், வித்யூத் ஸ்ரீனிவாசன், அஜய் வெங்கட் முறையே முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலையில் முதல் பரிசு வென்றார்கள்
 
அறம் செய்ய விரும்பு, ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும், அச்சம் தவிர், கற்றனை தூறும் அறிவு, நிலைக்கும் என்ற கனவில், பாரதி கண்ட புதுமைப்பெண், 
நெஞ்சு பொறுக்குதில்லையே, பாரதிதாசனின் தமிழ் உணர்வு  என்ற தலைப்புகளில் பேச்சுப் போட்டி நடைபெற்றது. ஆச்சரியப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் பிறந்த குழந்தைகள் இந்த தலைப்புகளிலேயே பேசி அசத்தினார்கள். லயா ரச்சனா பிரவின் முதல் நிலையிலும் ஹரிணி ஸ்ரீவிஷ்ணுஹரி இரண்டாம் நிலையிலும் ஷ்ரேயா வெங்கடாச்சலம் மூன்றாம் நிலையிலும் முதல் பரிசு பெற்றார்கள். பெரியவர்கள் பிரிவில் ப்ரீத்தி மோகன் முதல் பரிசை வென்றார்.
 
இந்த ஆண்டு உட்பட, பேச்சுப் போட்டி தலைப்புகளை மறைந்த தமிழ் ஆர்வலர் பழநிசாமி தேர்வு செய்து வந்தார். அடுத்த ஆண்டு முதல், பேச்சுப் போட்டி பரிசுகள் பழநிசாமி பெயரில் வழங்கப்படும் என்று சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அமெரிக்காவில் பிறந்து வளரும் குழந்தைகள் திருக்குறள் கற்றுக்கொள்வதை, ஊக்கப்படுத்துதற்காக சாஸ்தா தமிழ் அறக்கட்டளையினர் தொடங்கிய திருக்குறள் போட்டி 12 வது ஆண்டை நிறைவு செய்துள்ளது. உடன் ஆத்திச்சூடி, கட்டுரை, பேச்சுப் போட்டிகளும் நடத்தி அமெரிக்க தமிழ்க் குழந்தைகளின் தமிழ் மொழித் திறனை வலுப்படுத்தும் முயற்சிகளும் நடந்து வருவது சிறப்பு மிக்கதாகும்.
 
– வணக்கம் இந்தியா

From around the web