ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்!

டெல்லி: எடப்பாடி அணிக்கு எதிராக் உருவான ஓபிஎஸ் அணியின் 11 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்த்து சட்டமன்றத்தில் வாக்களித்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் இன்று ஒத்தி வைக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி முதல்வரான பிறகு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், ஓபிஎஸ் தலைமையிலான 11 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். அதிமுக எம்.எல்.ஏ.க்களாக இருந்து கொண்டு கட்சி கொறடா விதிகளை மீறியதாக சபாநாயகரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வில்லை. உயர்நீதிமன்றத்தில் ஒபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம்
 

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்!டெல்லி: எடப்பாடி அணிக்கு எதிராக் உருவான ஓபிஎஸ் அணியின் 11 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்த்து சட்டமன்றத்தில் வாக்களித்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் இன்று ஒத்தி வைக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி முதல்வரான பிறகு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், ஓபிஎஸ் தலைமையிலான 11 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். அதிமுக எம்.எல்.ஏ.க்களாக இருந்து கொண்டு கட்சி கொறடா விதிகளை மீறியதாக சபாநாயகரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வில்லை.

உயர்நீதிமன்றத்தில் ஒபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. சபாநாயகர் முடிவே இறுதியானது என்று வழக்கு தள்ளுபடி ஆகி விட்டது.

இதை எதிர்த்து திமுக கொறடா சக்ரபாணி மற்றும் டிடிவி தினகரன் அணி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் அடங்கிய  அமர்வுக்கு அனுப்பப் பட்டது. ஒபிஎஸ் கால அவகாசம் கேட்டதால் விசாரணை நிலுவையிலேயே இருந்து வருகிறது. நீதிபதி ஏ.கே.சிக்ரியும் ஓய்வு பெற்று விட்டார். வழக்கும் அப்படியே  தேங்கி விட்டது.

திமுகவில் சேர்ந்த தங்க தமிழ்ச் செல்வன் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்து 11 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்க மேல் முறையீடு வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், விரைவில் புது அமர்வுக்கு இந்த வழக்கு விசாரணைக்கு மீண்டும் எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறினார்.  

இதன்படி இவ்வழக்கு நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, பி.ஆர்.கவாய் ஆகியோரை கொண்ட புதிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் 11 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். கலைச்செல்வன், பிரபு உள்ளிட்ட 3 எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்த வழக்கு விசாரணையும் ஒத்திவைத்தனர். இரண்டு வழக்குகளும் ஒரே நாளில் தனித்தனியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஆளும் கட்சிக்கு எதிராக சட்டமன்றத்தில்  கட்சி கொறடாவை மீறி வாக்களித்தது தான் வழக்கின் முக்கிய அம்சம். கட்சித் தாவல் சட்டப்படி, மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கை இல்லாததால் அனைவரும் பதவி நீக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆனால் சபாநாயகர் அது குறித்து எந்த தீர்ப்பும் கூறவில்லை என்பதால், உச்சநீதிமன்றத் தீர்ப்புதான் அதை முடிவு செய்ய வேண்டியதுள்ளது.

கட்சித் தாவல் சட்டப்படி 11 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று தீர்ப்பு வந்தால், ஆளும் அதிமுக அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒ.பி.எஸ் உடனடியாக பதவி விலக வேண்டிய சூழலும் ஏற்படும். 

இந்த வழக்கை கருத்தில் கொண்டு தான் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மு.க.ஸ்டாலின் வலியுறுத்த வில்லையோ என்ற கேள்வியும் எழுகிறது. விரைவில் ஒபிஎஸ்-க்கு எதிரான தீர்ப்பு வந்து விட்டால் அரசு மீது உடனடியாக நம்பிகை இல்லாத் தீர்மானம் கொண்டு வர முடியும்.

 சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வாக்கெடுப்புக்குச் சென்றால், 6 மாதத்திற்கு மீண்டும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர இயலாது.

தமிழ்நாடு அரசின் ஆயுட்காலம் உச்சநீதிமன்றத்தின் பிடியில்..

– வணக்கம் இந்தியா

 

From around the web