சிகாகோவில் 10 வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு… ஜூலை 4 முதல் முப்பெரும் தமிழ் விழா! #FeTNA32 #WTC10 #CTS50

சிகாகோ: ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க சுதந்திரதினமான ஜூலை 4ம் தேதி விடுமுறையையொட்டி வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின்(ஃபெட்னா) தமிழ் விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தமிழ் விழா சிகாகோ மாநகரில் ஜூலை 4ம் தேதி தொடங்குகிறது. ஃபெட்னா தமிழ் விழாவுடன் 10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடும் நடைபெற உள்ளது. மேலும் இந்த விழாவை ஒருங்கிணைக்கும் அமெரிக்காவின் முன்னோடி தமிழ்ச்சங்கங்களில் ஒன்றான சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் பொன்விழாவும் கொண்டாடப் படுகிறது. மூன்று விழாக்களும் சேர்ந்து
 

 

சிகாகோ: ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க சுதந்திரதினமான ஜூலை 4ம் தேதி விடுமுறையையொட்டி வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின்(ஃபெட்னா) தமிழ் விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தமிழ் விழா சிகாகோ மாநகரில் ஜூலை 4ம் தேதி தொடங்குகிறது. 

ஃபெட்னா தமிழ் விழாவுடன் 10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடும் நடைபெற உள்ளது. மேலும் இந்த விழாவை ஒருங்கிணைக்கும் அமெரிக்காவின் முன்னோடி தமிழ்ச்சங்கங்களில் ஒன்றான சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் பொன்விழாவும் கொண்டாடப் படுகிறது. மூன்று விழாக்களும் சேர்ந்து அமெரிக்காவில் நடைபெறும் முப்பெரும் தமிழ் விழாவாக சிறப்பு பெறுகிறது.

மொரிஷியஸ் நாட்டின் குடியரசுத் தலைவர் பரமசிவம் வையாபுரி, ஐ.நா  மனித உரிமை உயர் ஆணையர் நவநீதம் பிள்ளை முக்கிய சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கிறார்கள். 

எழுத்தாளரும் மதுரை எம்.பியுமான சு.வெங்கடேசன், சாலமன் பாப்பையா, பட்டிமன்றம் ராஜா, பாரதி பாஸ்கர், சீர்காழி சிவசிதம்பரம், ஓவியர் மணியம் செல்வன், எழுத்தாளர் ஸ்டாலின் குணசேகரன், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், சுற்றுச்சூழல் ஆவணப்பட இயக்குனர் ஆர்.ஆர்.சீனிவாசன், நாட்டுப்புற கலைஞர்கள் செந்தில் ராஜலட்சுமி, இசைக்கலைஞர் கண்ணிக்ஸ் கன்னிகேஸ்வரன், கவிஞர் ராஜாத்தி சல்மா,லிடியன் நாதஸ்வரம் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.

குறள் தேனி, தமிழ்த் தேனீ, சங்கங்களின் சங்கமம், குறும்படப் போட்டி, இலக்கிய வினாடி வினா, இளைஞர் போட்டிகள் உள்ளிட்ட தமிழ் விழாவின் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் தமிழ்ச் சங்கங்களின் கலை நிகழ்ச்சிகளும் உண்டு. பிரபல பாடகர்களுடன் யுவன் சங்கர் ராஜா குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும் சிறப்பு சேர்க்கிறது.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் 120க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்களின் படைப்புகள் இடம் பெறுகின்றன. உலகம் முழுவதிலிருந்து வருகை தரும் தமிழ் அறிஞர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுகிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து 20 தமிழ் அறிஞர்கள் விழாவில் பங்கேற்கிறார்கள்.

கீழடி நம் தாய்மடி என்ற மையக்கருத்துடன் நடைபெறும் தமிழ் விழா ஜி.யூ.போப் 200வது நூற்றாண்டு நினைவு விழாவாகவும் சிறப்புச் சேர்க்கிறது.

5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த 4 நாள் முப்பெரும் தமிழ் விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, கனடா மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் சிகாகோ நோக்கி பயணப்பட ஆயத்தமாகி வருகிறார்கள்.

சுமார் 500 தன்னார்வலர்கள் பம்பரமாகச் சுழன்று பணியாற்றி வருகிறார்கள். விழா நடைபெறும் ஷாம்பாக் கன்வென்ஷன் சென்டரில் விழாவுக்கான ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஜூலை 4 விடுமுறை காலத்தில் சிகாகோ மாநகரில் தமிழ்க் கொண்டாட்டம் களைகட்டத் தொடங்கியுள்ளது.

– ராஜா ராமதாஸ், சிகாகோ

 
 

From around the web