தமிழ் வழிக் கல்வி பயிலும் மும்பை வாழ் மாணவர்களும் 10 வகுப்பு தேர்ச்சி ! முதல்வர் எடப்பாடி அறிவிப்பு!

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து தமிழகத்தில் 10 வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் மும்பை வாழ் தமிழர்களில் தமிழ் வழிக் கல்வி பயிலும் மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை மும்பையிலேயே எழுதிடும் வகையில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். மும்பையில் தமிழ் வழியில் தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தில் பயின்ற 69 பள்ளி மாணவர்கள் இத்தேர்வு மையங்களில் 2019-20ம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்
 

தமிழ் வழிக் கல்வி பயிலும் மும்பை வாழ் மாணவர்களும் 10 வகுப்பு தேர்ச்சி ! முதல்வர் எடப்பாடி அறிவிப்பு!கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து தமிழகத்தில் 10 வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் மும்பை வாழ் தமிழர்களில் தமிழ் வழிக் கல்வி பயிலும் மாணவர்கள் பத்தாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வினை மும்பையிலேயே எழுதிடும்‌ வகையில்‌ தேர்வு மையங்கள்‌ அமைக்கப்பட்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.

மும்பையில்‌ தமிழ்‌ வழியில்‌ தமிழ்நாடு அரசின்‌ பாடத்திட்டத்தில்‌ பயின்ற 69 பள்ளி மாணவர்கள்‌ இத்தேர்வு மையங்களில்‌ 2019-20ம்‌ ஆண்டுக்கான பத்தாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வு எழுதிட பதிவு செய்துள்ளனர்‌.

இவர்களும் பொதுத்‌ தேர்வில்‌ தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர் என தமிழக முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார். தமிழகத்தில் மதிப்பெண்கள் வழங்கப்பட்ட முறையில் அவர்களுக்கும் மதிப்பெண்கள் கணக்கிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

A1TamilNews.com

From around the web