ரூ.1000 ரொக்க பணம் இனி வீடு தேடி வரும்! டோக்கன் எல்லாம் கிடையாது!

கொரோனா அச்சத்தினால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரொக்கப் பணம் என்கிற அறிவிப்பு, அவர்களை மணி கணக்கில் ரேஷன் கடைகளின் வாசலில் க்யூவில் நிற்க வைத்தது. சமூக விலகலை கேலிக் கூத்தாக்கும் இந்த செயலுக்கு முதல்வர் எடப்பாடி முற்றுப்புள்ளி வைத்தார். இனி ரேஷன் கடைகளில் 1000 ரூபாய் ரொக்கப் பணம் வழங்கப்படாது என்றும், ரேஷன் அட்டைத்தாரர்களின் வீடுகளுக்கே வந்து டோக்கன் கொடுப்பதற்கு பதிலாக தகுந்த சரிபார்த்தலுடன் ரொக்கப் பணத்தை அதிகாரிகள் வழங்குவார்கள்
 

ரூ.1000 ரொக்க பணம் இனி வீடு தேடி வரும்! டோக்கன் எல்லாம் கிடையாது!கொரோனா அச்சத்தினால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரொக்கப் பணம் என்கிற அறிவிப்பு, அவர்களை மணி கணக்கில் ரேஷன் கடைகளின் வாசலில் க்யூவில் நிற்க வைத்தது.

சமூக விலகலை கேலிக் கூத்தாக்கும் இந்த செயலுக்கு முதல்வர் எடப்பாடி முற்றுப்புள்ளி வைத்தார். இனி ரேஷன் கடைகளில் 1000 ரூபாய் ரொக்கப் பணம் வழங்கப்படாது என்றும், ரேஷன் அட்டைத்தாரர்களின் வீடுகளுக்கே வந்து டோக்கன் கொடுப்பதற்கு பதிலாக தகுந்த சரிபார்த்தலுடன் ரொக்கப் பணத்தை அதிகாரிகள் வழங்குவார்கள் என்று தெரிவித்தார்.

இதையடுத்து இம்மாதம் 7ம் தேதி முதல் 1000 ரூ ரொக்க பணத்தை வீட்டிற்கே சென்று கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

1000 ரூபாய் பணத்தை பயனாளர்களிடம் தரும் போது, இலவச பொருட்களுக்கான டோக்கனையும் அவர்களிடம் கொடுக்க வேண்டும் என்றும், ஊரடங்கு காலம் முடிந்த பின்னரும், இம்மாதம் முழுவதுமே அவர்கள் தங்களது பொருட்களை ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

A1TamilNews.com

From around the web