10,+2 மாணவர்களுக்கு தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இதுவரை தமிழக அரசு வெளியிடவில்லை. தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடத்த ஆரம்பித்து விட்டன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மூலம் கல்வி கற்கும் மாணவர்களின் படிப்புத் திறனை மேம்படுத்தும் பொருட்டு தமிழக அரசு புதிய திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி 10 மற்றும் 12 ம் வகுப்பு செல்ல இருக்கும் அரசுப் பள்ளி
 

10,+2 மாணவர்களுக்கு தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இதுவரை தமிழக அரசு வெளியிடவில்லை.

தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடத்த ஆரம்பித்து விட்டன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மூலம் கல்வி கற்கும் மாணவர்களின் படிப்புத் திறனை மேம்படுத்தும் பொருட்டு தமிழக அரசு புதிய திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

அதன்படி 10 மற்றும் 12 ம் வகுப்பு செல்ல இருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆண்ட்ராய்டு மொபைல் வழங்க அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்ட்ராய்டு மொபைலில் ஜூம் ஆப் மூலம் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்கள் நடத்தப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக மாணவர்கள் ஏற்கனவே டிவி, மொபைல் போன்களையே அதிகம் பயன்படுத்தி பொழுதைக் கழித்து வருகின்றனர்.

மேலும் அவர்களுக்கு புதிய போன்கள் வழங்குவதன் மூலம் அவர்களின் கவனம் சிதற வாய்ப்புள்ளதாகவும் ஆசிரியர்கள் சார்பில் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பில் முதல் கட்டமாக அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் 5000பேருக்கு ஆண்ட்ராய்டு மொபைல் போன்கள் வழங்கப்பட இருப்பதாகவும், கல்வி கற்க மட்டுமே செல்போன்களை பயன்படுத்த பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும் என்றும் அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

A1TamilNews.com

From around the web